/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ரியாத்தில் சமூக நல்லிணக்க தமிழர் ஒன்று கூடல்
/
ரியாத்தில் சமூக நல்லிணக்க தமிழர் ஒன்று கூடல்
அக் 28, 2025

ரியாத்: இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ரியாத் மத்திய மண்டலம் சார்பில் “சமூக நல்லிணக்க தமிழர் ஒன்று கூடல்” நிகழ்ச்சி இஸ்திராஹ்வில் மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி குழந்தைகளுக்கான பேச்சுப் போட்டியுடன் துவங்கியது. “மனிதநேயம், சமூக நல்லிணக்கம், நாம் ஒர் குடும்பம்” என்ற தலைப்புகளில் சிறுவர்கள் சிறப்பாக பேசியனர். ஒருங்கிணைப்பில் அரசை ஆசிக் இக்பால், சீர்காழி ஜர்ஜீஸ் அஹமது, மற்றும் மீரான் மைதீன் பங்காற்றினர்.
மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்கள் சமூக ஒற்றுமை, கல்வி முன்னேற்றம், மனிதநேயத்தின் அவசியம் குறித்து உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக, ப. அப்துல் சமது கலந்து கொண்டு “தலை நிமிரும் தமிழகமும், மனிதநேயமும்” என்ற தலைப்பில் எழுச்சியுரையாற்றினார். அவருக்கு ரியாத்திலுள்ள சமூக அமைப்புகள் பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தன. பின்னர் சிறுவர், சிறுமியர்களுக்கு வெள்ளி நாணயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முடிவில் மண்டல துணைச் செயலாளர் சென்னை இப்ராஹிம் நன்றியுரை ஆற்றி, துவாவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. மொத்தம் 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
-ரியாத்திலிருந்து தினமலர் வாசகர் ஆரிப் அப்துல் சலாம்
Advertisement

