sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

அபுதாபியில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்

/

அபுதாபியில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்

அபுதாபியில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்

அபுதாபியில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்


பிப் 05, 2025

Google News

பிப் 05, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அபுதாபி: அபுதாபியில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் துவக்க விழாவும் அமீரகத்திற்கு வருகை தந்துள்ள கல்லூரியின் முதல்வர் உள்ளிட்ட நிர்வாக குழுவினர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக கல்லூரி முன்னாள் மாணவர்களின் அறிமுகத்தை தொடர்ந்து மதுக்கூர் ஜஃபர் ஸாதிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

திருமறை வசனத்தை ஆடுதுறை முஹைய்யதீன் ஆண்டவர் பள்ளிவாசல் முன்னாள் இமாம் அல்ஹாஜ் மௌலவி இ. ஷாஹுல் ஹமீது தாவூதி ஓதினார். பிறகு தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. வரவேற்புரை ஏ.எஸ். முஹம்மது அன்சாரி வழங்க, தொடர்ந்து கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளருமான ஹாஜி முனைவர் ஏ.கே.காஜா நஜ்முதீன், பொருளாளர் ஹாஜி எம்.ஜே. ஜமால் முஹம்மது ஆகியோர் வரலாற்று சிறப்பு மிக்க கல்லூரியின் வரலாறுகளையும், கல்லூரி செய்து வருகின்ற வளர்ச்சி பணிகளையும், எதிர்கால திட்டங்களையும் உள்ளடக்கி உரையாற்றினர்.


தொடர்ந்து பேசிய கல்லூரியின் முதல்வர் முனைவர் டி.ஐ. ஜார்ஜ் அமலரெத்தினம் விரிவான முறையில் சமூகத்தில் கல்லூரியின் தாக்கத்தை பற்றியும், உலக அளவில் வெற்றி கண்டுவரும் கல்லூரியின் வளர்ச்சி குறித்தும் முன்னாள் மாணவர்களின் செயல்பாடுகளையும் விவரித்தார். முன்னாள் மணவர்கள் சங்கத்தின் பொதுசெயலாளர் முனைவர் எம். செய்யது அலி பாதுஷா, கல்லூரியின் துணைச் செயலாளர் முனைவர் கே.அப்துல் சமது ஆகியோர் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பை பற்றி பாராட்டிப் பேசினர்.


பாரம்பரியம் மிக்க இக்கல்லூரியில் படித்தவர்கள் எல்லாம் வெளி நாடுகளில் இருந்தாலும் வரலாற்றை எழுத கூடியவர்களாக இருக்கின்றனர் எனவும், கல்லூரியின் வளரச்சியில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கின்றது எனவும், அதன் மூலம் கல்வி பணியை சிறப்பான முறையில் செய்ய முடிகிறது எனவும் பாராட்டு தெரிவித்தனர்.


வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. அபுதாபி கிளையின் சார்பாக 75-ஆம் வருடத்தை பூர்த்தி செய்யவிருக்கும் கல்லூரிக்கும் மற்றும் ஜமால் முஹம்மது கல்லூரியின் நிர்வாகத்திற்கும் சிறப்பு நினைவு கேடயம் புதிய நிர்வாகிகளால் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பாபநாசம் முஹம்மது யஹ்யா நன்றி கூற, அபுதாபி ஜமாஅத் உலமா சபையின் தலைவர் காயல் பட்டிணம் அல்ஹாபில் ஹூஸைன் மக்கி மஹ்ழரியின் பிரார்த்தனையைத் தொடர்ந்து வருகை தந்த அனைவருக்கும் இரவு விருந்தோடு விழா இனிதே நிறைவு பெற்றது.


இந்த நிகச்சியில் முன்னாள் மாணவர்கள் -துபை சங்க நிர்வாகிகள், அபுதாபி மற்றும் அமீரகத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் கல்லூரியின் முன்னாள் மாணவர்களும், அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள், லால்பேட்டை ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் பல தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டர். விழா ஏற்பாடுகளை அபுதாபி சங்கத்தின் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.


- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us