
பஹ்ரைன்: பஹ்ரைன் இந்திய தூதரகத்தின் சார்பில் உலக தியான தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஆர்ட்ஸ் ஆஃப் லிவ்விங் அமைப்புடன் இணைந்து இந்த தியான நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் வினோத் கே ஜேக்கப் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் தியானத்தின் முக்கியத்துவம் குறித்து விவரித்தார். மேலும் இந்தியாவின் அரசியலமைப்பு தொடர்பான காணொலியும் திரையிடப்பட்டது.
பஹ்ரைன் இந்திய தூதரகத்தின் சார்பில் நடத்தப்பட்ட வினாடி வினா நிகழ்ச்சியில் எட்டாயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களில் 106 பேர் முபத்துக்கு முப்பது மதிப்பெண்களை பெற்றனர். அவர்களுக்கு இந்திய தூதர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். பின்னர் அனைவரும் தூதருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பஹ்ரைன் அரசு அதிகாரிகள், இந்திய சமூகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement