/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தாரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற சிக்டா விருதுகள் வழங்கு விழா
/
கத்தாரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற சிக்டா விருதுகள் வழங்கு விழா
கத்தாரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற சிக்டா விருதுகள் வழங்கு விழா
கத்தாரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற சிக்டா விருதுகள் வழங்கு விழா
டிச 24, 2024

கத்தாரில் சிக்டா விருதுகள் வழங்கு விழா கத்தாரின் புகழ்பெற்ற கத்தார் தேசிய மாநாட்டு மையத்தில் (QNCC) பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியானது சிக்டா நிறுவனர் சாதிக் பாஷாவால் மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலத்தில் உள்ள கத்தார் வாழ் ஆளுமைகளை இவ்விருதுகள் 8 பிரிவுகளில் கௌரவித்தன. மேலும் இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, தென்னிந்திய திரையுலகின் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இவ்விழா நடிகைகள் குஷ்பூ, அம்மு ராமச்சந்திரன், சுமலதா அமர்நாத், நடிகர்கள் யோகி பாபு, அசார், டி.எஸ்.கே, விமல், விசுவநாத், ரியாஸ் கான், கன்னட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்ஆகியோரின் வருகையால் நிகழ்ச்சியானது தனிச்சிறப்பை பெற்றது.
இந்த நிகழ்வில் 2500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து, விழாவை சிறப்பித்தனர். தென்னிந்தியர்களின் கலாச்சார மற்றும் கலை நடைமுறைகளைக் கொண்டாடும் சிக்டா விருதுகள், வளர்ந்து வரும் திறமைகளை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக திகழ்கிறது.
- தினமலர் வாசகர் முகமது பாசித்
Advertisement