/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் 100ஆவது மாதந்தர நிகழ்ச்சி
/
வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் 100ஆவது மாதந்தர நிகழ்ச்சி
வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் 100ஆவது மாதந்தர நிகழ்ச்சி
வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் 100ஆவது மாதந்தர நிகழ்ச்சி
பிப் 16, 2026

வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் 100ஆவது மாதந்தர நிகழ்ச்சி “பொழில் -100 கொண்டாட்டம் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 'மூப்பில்லா முதல் மொழியே' என்ற சிங்கப்பூர்த் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை, சாலைகுணாநயமணி மற்றும் சுர்ஜனா வெங்கடகிருஷ்ணன் பாட நிகழ்ச்சி தொடங்கியது.
அமைப்பின் பொருளாளர் மஹ்ஜபீன் வரவேற்றார். தொடர்ந்து வாழ்வியல் இலக்கியப் பொழிலின் 'பொழில் வாழ்த்துப் பாடலை” சாலைகுணாநயமணி மற்றும்சுர்ஜனாவெங்கடகிருஷ்ணன்பாடினர்.
அடுத்து, சுப்ரமணியன் பூஜாஸ்ரீ, தமிழ் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினார். தொடர்ந்து சங்கீதம் அங்கத்தில் ஜான்வி நாராயணன் மற்றும் ஸ்ரீஜா நாராயணன் குட்டி தமிழ்ப் பாடலை பாடினர்.
பொழிலின் 100வது கொண்டாட்டத்தைச் சிங்கப்பூர் சமுக அறிவியல் பல்கலைக் கழகத்தில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய பட்டக்கல்வியின் தலைவர் முனைவர் மணிவண்ணன் வாழ்த்தினார். முனைவர் சுப.திண்ணப்பன் காணொளி மூலம் இணைந்து வாழ்த்தினார். வளர் தமிழ் இயக்கத்தின் (Tamil Language Council) தலைவர் நசீர்கனி JP, PBM வாழ்த்தினார்.
தொடர்ந்து தலைமையுரையில் அமைப்பின் தலைவர் பாவலர்எல்ல. கிருஷ்ணமூர்த்தி பொழில்அமைப்பு கடந்து வந்த பாதை மைல்கள் பற்றி விளக்கினார்.
சிறப்புவிருந்தினர் Gabriel Lam (MP for Sembawang GRC) 'பொழில் பண்பலை செயலி' அறிமுகம், 'பொழில் பண்பலையின் கவின்மிகு கவிதைகள்' புத்தக அறிமுகம், பொழில் 100 இலக்கியப் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த பாடல் காணொளி அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை மற்றும் நினைவு பரிசு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
'தெண்கடல்வளாகம்' எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலுக்கு 'ஈகையின் இலக்கணம்' என்னும் தலைப்பில் இலக்கிய நாடகத்தில் மாணவர்கள் உட்பட 9 பேர் பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்தனர். தொடர்ந்து, சிவமதி கலித்தொகை பாடல் ஒன்றைக் கூறி விளக்கினார்.
நடுவர்களுக்கும், வாழ்த்துரை வழங்கியவர்களுக்கும், பல்சுவை அங்கங்களில் கலந்து கொண்டவர்களுக்கும், பொழில் செயலவை உறுப்பினர்களுக்கும் நினைவுப் பரிசுகளைச் சிறப்பு விருந்தினர் வழங்கினார்.
திருச்சியிலிருந்து வந்திருந்த முனைவர் கரு. கலையரசி எழுதிய 'கவினுறு காதல்' கவிதை நூல் மற்றும் முனைவர் கா. காமாட்சி எழுதிய 'இலக்கண இலக்கிய வளம்' கட்டுரை நூல் வெளியீடு கண்டன.
அதனைத் தொடர்ந்து,'பொழில் என்றால் என்ன?' மற்றும் 'பொழில் சின்னம்' பற்றி அமைப்பின் செயலவை உறுப்பினர் மோகனபிரியா பார்வையாளர்களிடம் கேள்வி கேட்டு, சரியான பதிலோடு விளக்கம் கூறினார். தீபிகா வழிநடத்திய அவையில் இருந்த பார்வையாளர்களுக்கு நேரடி திரை விளையாட்டு (Kahoot) போட்டி, பெரியவர்களுக்கான இலக்கிய வரிகள் வாசித்தல் போட்டி, சிறுவர்களுக்கான திருக்குறள்கள் பிழையில்லாமல் வாசித்தல் போட்டி, கவிதை-கவிஞர் பொருத்துதல் போட்டி நடைப்பெற்றன.
கவிதைப் போட்டி வெற்றியாளர்கள், பாடல் போட்டி வெற்றியாளர்கள், கட்டுரைப் போட்டி வெற்றியாளர்கள், தனித்தமிழ் போட்டி வெற்றியாளர்கள் என அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
சிங்கப்பூரைச் சார்ந்த தமிழ்ச் சான்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள், இதர அமைப்பின் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் வந்திருந்தனர். மேலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் வந்திருந்தது சிறப்பாகும். கிட்டதட்ட 230 பேர் வந்திருந்து இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே, பிரதீபா, சுகந்தி நிகழ்ச்சியைக் கலகலப்பாக நெறிப்படுத்தினர். ராஜேஸ்வரி ரமேஷ் நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து இரவு சிற்றுண்டியுடன் நிகழ்ச்சிநிறைவுற்றது.
முகநூலில்கண்டுகளிக்க:
அமைப்பின்இணையப்பக்கம்: https://www.ilakkiyapozhil.com
- சிங்கப்பூரிலிருந்து நமது வாசகர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி
Advertisement

