/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
இந்திய சமுகத்தினருக்கு சிங்கப்பூர் பிரதமர் பாராட்டு
/
இந்திய சமுகத்தினருக்கு சிங்கப்பூர் பிரதமர் பாராட்டு
இந்திய சமுகத்தினருக்கு சிங்கப்பூர் பிரதமர் பாராட்டு
இந்திய சமுகத்தினருக்கு சிங்கப்பூர் பிரதமர் பாராட்டு
நவ 16, 2025

பிறந்த நாடு குடும்பம் நண்பர்களை விட்டு வெளிநாட்டிற்குச் செல்வதென்பது மிகப் பெரிய முடிவு. கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் தொடங்கும் பயணம் குறித்து ஒரு அச்சம், பதற்றம் நிச்சயம் இருந்திருக்கும். பல நாள் கப்பல் பயணத்திறகுப் பின் அந்நிய மண்ணில் வாழ்க்கையைத் தொடங்குவதில் காணும் சோதனைகளை சிறிதாக மதிப்பிட இயலாது. நம் முன்னோர்கள் இங்கு வந்திராவிடில், காலப்போக்கில் இங்கேயே தங்கள் குடும்பங்களோடு வேரூன்றா விட்டால் இப்போது நாம் உலகின் தலைசிறந்து விளங்கும் சிங்கப்பூரில் வாழ்ந்திருக்க மாட்டோம்.
நம்மைச் சுற்றியிருக்கும் இந்தியப் பண்பாடு, மொழி, உணவு வகைகள், இந்திய மரபுடைமை நிலையம் இருந்திருக்காது. மொழி, உடை, அணிகலன், சமயம், தொழில், பழக்க வழக்கங்கள் யாவும் ஓர் இனத்தின் அடையாளங்களாக விளங்குகின்றன. இவ்வடையாளங்கள் நம் பூர்வீகம், நம் சொத்து, நம் வரலாறு என நம்மை ஏதோ ஒரு வகையில் ஊக்குவிக்கின்றன. இவற்றை அழியவிட்டுக் கொண்டு வரப்படும் ஒற்றுமை நிலைத்திருக்காது.
வேறுபாடுகளிடையே பிறக்கும் புரிந்துணர்வுவழி வரும் ஒற்றுமையே பல்லாண்டு காலம் நீடித்திருக்கும். இந்தியமரபுடைமை நிலையம் சிங்கப்பூர் இந்தியர்களின் பல நூற்றாண்டு கால நினைவுகளை ஆவணப்படுத்தி பத்தாண்டுகள் கழித்து விட்டன. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் பத்தண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு புகழாரம் சூட்டினார்.
அவர் மேலும் கூறுகையில் நிறுவியோர் நினைவகம் நவீன சிங்கப்பூர் வரலாற்றைக் காக்குமெனில் இந்திய மரபுடைமை நிலையம் இந்தியர்களின் வருகையையும் வளர்ச்சியையும் நிரந்தரப்படுத்தும், வரும் தலைமுறையினரின் ளே்ளிகளுக்குப் பதிலாக அமையும் என்பது உறுதி என்றார்.
மரபுடைமை நிலையத்தின் தலைவர் ரா.ராஜாராம் இந்த நிலையத்தை நிறுவியது இது ஒரு நினைவுச் சின்னமாகவோ, பொருள்கள் வைக்கப்படும் களஞ்சியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவோ அன்று. மாறாக இது ஒரு வாழும் இடமாக, நினைவுகளும் அதற்காள அர்த்தங்களும் ஒன்றிணையும் ஓர் இடமாக இருக்க வேண்டுமென்பதற்காகவே என்றார்.
அவர் மேலும் புகழ்ந்துரைக்கையில் இந்த நிலையம் நம் முன்னோர்களின் பயணம், நாட்டின் சமூக பொருளியலுக்கு இந்திய சமூகம் ஆற்றிய பங்கு, தியாகம் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தும் சரித்திரச் சின்னமென்றார். இங்குள்ள அரிய படங்கள், பொருள்கள், காட்சிப் பதிவுகள் நமது வேர்களைப் பற்றிய ஆழமான பதிவுகளை, புரிதலை வழங்குகின்றன. இந்திய சமூகத்தின் வேறுபட்ட பண்பாடுகளையும் பாரம்பரியங்களையும் ஒரே குடையின்கீழ் கொணர்ந்து இந்திய சமூகத்தின் கூறுகளையும் தனித்துவமான மரபுகளையும் காட்சிப்படுத்துகிறது. சிங்கப்பூரின் மற்ற இனத்தவருக்கும் எடுத்து விளக்குகிறது.
இந்தியர்களிடையே நல்லிணக்கத்தை வளர்க்க உதவுவதோடு இந்திய சமூகத்தின் பன்முகத் தன்மையை சிங்கப்பூரின் பிற இனத்தவர்க்கும் எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரதமர் சிங்கப்பூர் இந்திய சமூகம் எவ்வாறு நமது தேசிய அடையாளத்தின் ஓர் அங்கமாக மாறி நிலைத்திருக்கிறது எனும் கதையைச் சொல்லுவதற்காகவே இந்திய மரபுடைமை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இங்கு வாழும் இந்தியர்கள் அனைவரும் இந்திய மரபுடைமை நிலையத்திற்கு வருகை புரிய வேண்டும். இளைய தலைமுறையினரை நிலையத் திட்டங்களில் பங்கேற்கச் செய்ய வேண்டும். பல்கலைக் கழக இந்திய மன்ற நிகழ்ச்சிகளுக்கும் இந்த நிலையம் பங்களிக்க வேண்டும் தங்கள் பாமை்பரியத்திலிருந்து இளையர்கள் விலகிச் செல்லும் போது இந்நிலையம் ஒரு பண்பாட்டு வழிகாட்டியாகச் செயல்பட வேண்டும்.
தங்கள் பாம்பரியத்திலிருந்து இளையோர் விலகிச் செல்லும்போது ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்து நமது மொழி, இசை, நடனம் உணவு, விழாக்கள் முதலியவற்றை அவர்கள் கண்டறிந்து தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ள நிலையம் தளமாக அமைய வேண்டும். இது வெறும் சுற்றுலாத்தளம் அன்று. நமது முன்னோர்கள் சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியதன் கதைகள், காட்சிகள் பற்றிப் பெருமிதம் கொள்ள வேண்டும். தலைமுறை இடைவெளியைக் குறைத்து பாரம்பரியத்தின் மதிப்பை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் சின்னம் என்றார்.
- சிங்கப்பூரிலிருந்து நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement

