/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் 97ஆவது மாதாந்திர நிகழ்ச்சி
/
வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் 97ஆவது மாதாந்திர நிகழ்ச்சி
வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் 97ஆவது மாதாந்திர நிகழ்ச்சி
வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் 97ஆவது மாதாந்திர நிகழ்ச்சி
நவ 09, 2025

'வாழ்வியல் இலக்கியப் பொழில்' அமைப்பின் 97ஆவது மாதாந்திர நிகழ்ச்சி 08/-11/-2025 (சனிக்கிழமை) மாலை 6.00 மணிக்கு பொங்கோல் சமூக மன்றத்தில் நடைபெற்றது. 'மூப்பில்லா முதல் மொழியே' என்ற சிங்கப்பூர்த் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலோடு நிகழ்ச்சி தொடங்கியது. பொதுப்பிரிவில், அமைப்பின் உறுப்பினர் மோகனபிரியா ராமலிங்கம் வரவேற்றார். தொடர்ந்து வாழ்வியல் இலக்கியப் பொழிலின் 'பொழில் வாழ்த்துப் பாடல்” இசைக்கப்பட்டது.
தொடர்ந்து சிறுவர்கள் அங்கத்தில், வர்ணிகா வினேஷ் மனோ ஆத்திசூடி கூறினார். செந்தில்குமார் மிஷிகா' நாலடியார்' பாடல் பாடினார். விக்ரம் கிரிஷ் 'மூதுரை பாடல்' பாடினார். விக்ரம் தியா 'நன்னெறிப் பாடல்' பாடினார். மேகவர்தினி அருள்பிரகாஷ் 'நன்னெறி பாடல்' பாடினார். தமிழோவியா அருள்பிரகாஷ் 'திருக்குறள்' சிலவற்றைக் கூறினார். சிவானந்தம் சிவமதி 'திருக்குறள்' சிலவற்றைக் கூறினார்.
தொடர்ந்து அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி அறிமுகவுரையில் 'ஞாலம்' என்னும் தலைப்பில் பேசினார். அதனைத் தொடர்ந்து சிறப்புரையில் 'இலக்கியங்களில் நாட்டுப்புறவியல்' என்னும் தலைப்பில் பண்ருட்டி, முனைவர் அ.பாண்டு பேசினார். உஷா சுப்பிரமணியன் சென்னையிலிருந்து இணையம்வழி இணைந்து 'பன்முகப் பாவலன் பாரதி' என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சி முழுவதும் காணொளியாக முகநூல்வழி நேரலையாகவும் ஒளிபரப்பப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சி பொழில் பண்பலையில் நேரலையாக ஒலிபரப்பப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ்ச் சான்றோர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கேட்டு மகிழ்ந்தனர். நிகழ்ச்சியை தீபிகா மற்றும் பிரியங்கா நெறிப்படுத்தினர். உஷாகிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
முகநூலில்கண்டுகளிக்க:
https://www.facebook.com/share/v/17BRwcLLA4/?mibextid=wwXIfr
அமைப்பின்இணையப்பக்கம்: https://www.ilakkiyapozhil.com
- சிங்கப்பூரிலிருந்து தினமலர் வாசகர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி
Advertisement

