/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் ஸ்ரீ புனிதமரம் பால சுப்பிரமணியர் ஆலய கார்த்திகை விழா கோலாகலம்

செப் 07, 2025

சிங்கப்பூர் ஆலயங்களில் ஆடித் திங்கள் முழுவதும் விழாக்கள் கோலாகலமாக நடைபெற்றது . சிங்கப்பூர் ஈசூன் புனிதமரம் ஸ்ரீ பால சுப்பிரமணியர் ஆலயத்தில் ஆடிக் கார்த்திகை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வைகறையிலேயே ஆலயத்தின் சார்பாக முதல் காவடி முருகப் பெருமானுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
காலை முதலே பக்தப் பெருமக்கள் குடம் குடமாகச் சமர்பித்த பால் குட அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற்றது. ஆலயம் நிரம்பி வழிந்த பக்தப் பெருமக்களிடையே “ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா “ எனும் சரண கோஷம் விண்ணதிர அபிஷேகம் - அலங்காரம் - ஆராதனை மெய்சிலிர்க்க வைத்தது.. தங்க மயில் வாகனத்தில் சர்வ அலங்கார நாயகராக எழுந்தருளி முருகப் பெருமான் ஆலயம் வலம் வந்த காட்சியைக் காணக்கண் கோடி வேண்டும்.
அருட் பிரசாதத்துடன் அறுசுவை அன்னப் பிரசாதமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஆலய மேலாண்மைக் குழுவினர் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தமை பாராட்டுக்குரியவை.
---நமது செய்தியாளர்: வெ.புருஷோத்தமன்.
Advertisement