sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

சிங்கப்பூர்

/

செய்திகள்

/

சிங்கப்பூரின் 60வது பிறந்தநாள் சாதனை நிகழ்ச்சி

/

சிங்கப்பூரின் 60வது பிறந்தநாள் சாதனை நிகழ்ச்சி

சிங்கப்பூரின் 60வது பிறந்தநாள் சாதனை நிகழ்ச்சி

சிங்கப்பூரின் 60வது பிறந்தநாள் சாதனை நிகழ்ச்சி


ஆக 18, 2025

Google News

ஆக 18, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கப்பூரின் 60-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், வாம்போ லோரோங் லீமா குடியிருப்பாளர் வலையமைப்பு, வாம்போ ராஜா கோர்ட் குடியிருப்பாளர் வலையமைப்பு மற்றும் வாம்போ நற்பணிப் பேரவை ஆகியவை இணைந்து, 400 வண்ணமயமான காற்றாடிகளைப் பயன்படுத்தி 'SG60' என்ற மாபெரும் வார்த்தையை உருவாக்கி, சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தன.

வாம்போ பூங்காவில் (ஆகஸ்ட் 17) நடைபெற்ற இந்தச் சிறப்புமிக்க நிகழ்வில், சீன, மலாய், இந்தியா உட்பட 200-க்கும் மேற்பட்ட பல்லின மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அனைவரும் நல்லிணக்கத்துடன் ஒன்றிணைந்து, 10 மீட்டர் நீளமும் 3 மீட்டர் அகலமும் கொண்ட பரப்பில், காற்றாடிகளில் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய 4 மொழிகளிலும் தங்கள் வாழ்த்துகளை எழுதி இந்தச் சாதனையைப் படைத்தனர்.

இது வெறும் ஒரு சாதனையாக மட்டும் இல்லாமல், சிங்கப்பூரின் பல்லின சமூகத்தின் ஒற்றுமையைப் பறைசாற்றும் ஒரு நிகழ்வாக அமைந்தது. வாம்போ ராஜா கோர்ட் குடியிருப்பாளர் வலையமைப்பின் தலைவர் டெக் பூன், 'இந்தச் சாதனையை வாம்போ குடியிருப்பாளர்களும் மூன்று சமூக அமைப்புகளும் இணைந்து படைத்தது மிகவும் அர்த்தமுள்ளது. இது நமது ஒற்றுமையைப் பறைசாற்றுகிறது' என்று தெரிவித்தார்.

பிரகாசமான எடுத்துக்காட்டு
காற்றாடிகளினால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய சொல் உருவாக்கத்திற்காக லோரோங் லிமாவ் குடியிருப்பாளர்கள் வலையமைப்பு சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்ததன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த லட்சிய இலக்கை நனவாக்க வாம்போ குடியிருப்பாளர்களை ஒன்றிணைத்தது. நமது எஸ்ஜி60 தேசிய தினத்தைக் கொண்டாட உண்மையிலேயே அர்த்தமுள்ள ஒன்றை உருவாக்க சமூகம் எவ்வாறு ஒன்றிணைய முடியும் என்பதற்கு இஃது ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டு.
தொலைநோக்கு, அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்துடன் இந்த முயற்சியை முன்னெடுத்த மில்லத் அகமதின் சிறந்த தலைமைக்கு இந்தச் சாதனை ஒரு சான்றாகும். மில்லத் அகமது பல ஆண்டுகளாக லோரோங் லிமாவ் குடியிருப்பாளர்கள் வலையமைப்பில் அர்ப்பணிப்புள்ள தன்னார்வலராக இருந்து வருகிறார். மேலும் அவர் குடியிருப்பாளர்களின் நலனுக்காகத் தொடர்ந்து வாதிட்டு வருகிறார், வீடுகளுக்குச் சென்று பண்டிகை கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வது போன்ற பல்வேறு வெளிநடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு, சமூகத்தில் யாரும் பின்தங்கியிருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் என்று கூறினார் லோரோங் லீமா குடியிருப்பாளர் வலையமைப்பு தலைவர் திருமதி வூன் மெய் ஹுய்.

75 நாட்கள் எங்கள் கடின உழைப்பு
சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற விரும்பும் பல இளைஞர்களையும் மூத்தோர்களையும் நான் இந்த நிகழ்வில் கண்டேன். மேலும் அவர்களிடமிருந்து பல நல்ல கருத்துக்களைக் கேட்டேன். இந்தத் திட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் சமூகப் பிணைப்பையும், அதீத ஈடுபாட்டையும் காண முடிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று வாம்போ நற்பணி பேரவை தலைவர் ராஜசேகர் கூறினார்.
இவ்வருட சிங்கப்பூர் தேசிய தின நிகழ்வை என்னை எடுத்து நடத்தச் சொன்னார்கள். இந்த நிகழ்வை ஒரு சாதாரண நிகழ்ச்சியாகச் செய்யாமல் ஒரு சாதனை நிகழ்ச்சியாகச் செய்யலாம் என்று திட்டமிட்டேன். அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய சமூக அடித்தள அமைப்பு தலைவர்களுக்கும், வாம்போ குடியிருப்பாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இச்சாதனை நிகழ்ச்சிக்காக நாங்கள் கிட்டத்தட்ட 75 நாட்கள் எங்கள் கடின உழைப்பை கொடுத்து இன்று இந்த வெற்றியை அறுவடை செய்துள்ளோம். மேலும் இந்நிகழ்ச்சியின் ஆதரவாளர் மாஸ்க் ஸ்டூடியோ நண்பர் கார்த்திக் அவர்களுக்கும், தேசிய பூங்கா வாரியத்திற்கும், சமூக மன்ற ஒருங்கிணைப்பாளர் பெலிசியாவிற்கும் எங்கள் நன்றியை கூறுகிறோம் என்று நிகழ்ச்சி இயக்குநர் மில்லத் அகமது தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் வாம்போ சமூக மன்ற நிர்வாகக் குழு தலைவர் சியா செங் கீ, சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தின் நடுவர் பிரான்சிஸ் டான் சமூக அடித்தளத் தலைவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்கள். இதில் பங்கேற்ற குடியிருப்பாளர்களுக்கு அன்பளிப்புப் பைகள், மதிய உணவு, பனிக்கூழ்கள் வழங்கப்பட்டன. மேலும், விளையாட்டுப் போட்டிகள், சிங்கப்பூர் பற்றிய வினாடி வினா, அதிர்ஷ்டக் குலுக்கல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

- நமது செய்தியாளர், வெ.புருஷோத்தமன் .



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us