/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா
/
சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா
சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா
சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா
ஜன 01, 2026

சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா
சிங்கப்பூர் பிரபல வைணவத் தலமான சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி மஹோற்சவப் பெரு விழா டிசம்பர் 30 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.
தங்கம் உருக்கி தழல் குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ என எண்ணுமாறு தனது கிரணங்களை உதய சூரியன் பிரகாசிக்கு முன்னே ஸ்ரீ ராமர் ஆலய சுப்ரபாத ஒலி எங்கும் பரவி புளகாங்கிதமடையச் செய்தது. தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சியும் தோமாலா சேவையும் நடைபெற ஸ்ரீ சீதா லட்சுமண சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு பக்தர்கள் செலுத்திய பால் குட அபிஷேகம் கண்குளிர நடைபெற்றது. பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த பரமபத வாசலில் பூஜை செய்து தலைமை அர்ச்சகர் சொர்க்க வாசலைக் காட்சிப்படுத்த பக்தர்களின் “ கோவிந்தா ...மாதவா...நாராயணா ...மது சூதனா “ எனு் நாமம் விண்ணதிர முழங்கியது. சொர்க்க வாசல் வழியே பக்தப் பெருமக்கள் அணிவகுத்து வருகை புரிந்து மனமாற செஞ்சுருகி வழிபட்ட காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.
தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் வைகுண்ட ஏகாதசி மகிமை பற்றி உருக்கத்தோடு எடுத்துரைத்தார். மண்டபம் நிறை பக்தப் பெருமக்கள் சர்வ அலங்கார நாயகர்களாக ஆலயம் வலம் வந்த ஸ்ரீ சீதா லட்சுமண ஹனுமந் சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை தரிசித்து மகிழ்ந்தனர். ஆலய நிர்வாகம் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
- நமது சிங்கப்பூர் செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்
Advertisement

