sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

செய்திகள்

/

அட்லாண்டாவில் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்த தயாராகிறார்கள் 150 இளம் எழுத்தாளர்கள்

/

அட்லாண்டாவில் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்த தயாராகிறார்கள் 150 இளம் எழுத்தாளர்கள்

அட்லாண்டாவில் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்த தயாராகிறார்கள் 150 இளம் எழுத்தாளர்கள்

அட்லாண்டாவில் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்த தயாராகிறார்கள் 150 இளம் எழுத்தாளர்கள்


நவ 14, 2024

Google News

நவ 14, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Tamilezhuthapadi Publications ( TEP) ன் முதன்மையான நோக்கம் குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்தவும், அவர்களின் கற்பனைத் திறனை எழுத்தின் மூலம் ஒரு தளம் அமைப்பதேயாகும். குழந்தைகளுக்கென ஒரு எழுத்துலகம் அதுவும் அவர்களே உருவாக்க உதவி செய்வதே TEPன் தலையாய எண்ணமாகும். இதை இவர்கள் முற்றிலும் இலவசமாகவே பயன்படுத்த வழிவகை செய்கிறார்கள் என்பதே இவர்களின் உன்னத நோக்கத்தை பறை சாற்றுகிறது.

Tamilezhuthapadi Publications ( TEP) இன் பயணம் தொடங்கப்பட்டது 2020ம் ஆண்டு. கம்மிங் தமிழ் பள்ளியின் முதல்வர் தீபா அகிலன் தமிழ் பள்ளிக்காக ஓர் நூலகம் ரீடிங் கிளப் தொடங்கலாம் என்று எண்ணியபோதுதான் சிறுவர்களுக்கென தமிழ் புத்தகங்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு என்பதை கண்டறிந்தார். அப்போது அவருக்கு தோன்றிய எண்ணம்தான் ஏன் நாமே சிறுவர் புத்தகங்களை உருவாக்கக் கூடாது என்பது. அதன் விளைவாக, தமிழ் நாட்டில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து புத்தகங்கள் உருவாக்க எண்ணினார். அச் சமயம் அவர்களுடன் இணைந்து ஒரு செயலி உருவாக்க இயலாத காரணத்தால் தீபா அகிலன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் ஆரம்பித்ததே இந்த TEP.


Tamilezhuthapadi Publications ( TEP) இன் ஆரம்பம் எளிமையானதாக தோன்றினாலும் அவர்களுடைய துவக்கம் கடினமாக இருந்தது. வட அமெரிக்காவில் துவங்கப்பட்ட தமிழ் புத்தகங்களை மட்டுமே வெளியிடும் ஒரு பதிப்பகம், முன்னோடி யாருமில்லாத காரணத்தால் தானே விழுந்து தானே எழுந்திருக்க வேண்டிய சூழலைத் திறம்பட செய்து காட்டியிருக்கிறார்கள் TEP குழுவினர்.2020ல் ஆரம்பித்து முற்றிலும் இலவசம் என்ற சுகமான சுமையை தோளில் சுமந்து கம்மிங் தமிழ் பள்ளி மாணவர்களை மட்டுமே எழுத வைத்து தங்கள் முதல் வெளியீட்டை 2021ல், 175 புத்தகங்கள் - 150 க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி இவர்கள் செய்தது


அங்கீகரிக்கப்படாத ஒரு உலக சாதனை ஆகும். முதல் ஆண்டு இவர்களுக்கு வாழ்த்துரை வழங்கியவர் சாகித்ய அகாடமி விருது பெற்ற புகழ் பெற்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். முதன்மை விருந்தினர் பேட்ரிக் வாலஸ் - இவர் Georgia Department of Education- Program Specialist For World Language.


2021ல் கம்மிங் தமிழ் பள்ளியோடு மட்டும் துவங்கப்பட்ட பயணத்தில் அட்லாண்டாவை சேர்ந்த மேலும் 3 பள்ளிகளான PeachTree Tamil School, Lilburn Tamil School, Marietta Tamil School இணைத்துக் கொண்டு 280 புத்தகங்களை ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் வெளியிட்டது Tamilezuthapadi Publications இன் ஒரு மைல் கல் சாதனையாகும். இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினர் மிக்கேலா கிளாஸ் நிக்ஸ். Georgia Department of Education - Program Specialist.


2021ல் ஒரே பள்ளியுடன் அடியெடுத்து வைத்த TEP அடுத்த ஆண்டு(2022) மேலும் 3 பள்ளிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது. தன்னலமில்லாத தன் இலக்கை நோக்கி 2023ல் மேலும் பல பள்ளிகளுடன் இணைந்து VDart CEO சித் அஹ்மத் தலைமையில் 300 புத்தகங்களை வெளியிட்டது உலக வரலாற்றில் முதல் முறையாகும்.


Tamilezuthapadi Publications (TEP)இன் அடுத்த முயற்சியாக புத்தகங்களை இணையத்திலும் எழுதி, எழுதிய புத்தகங்களை வெளியிட, வெளியிட்ட புத்தகங்களை உடனே படிக்க உருவாக்கிய இணையகளம் https://storybuzz.org/ இங்கு 700க்கும் மேற்பட்ட புத்தகங்கள் படிக்க கிடைக்கின்றன. இவை மட்டுமல்லாமல் 170 புத்தகங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. இணையதளத்தில் அடுத்த ஆண்டில் ஆயிரம் புத்தகங்கள் என்ற இலக்கை எளிதில் தொட்டு விடுவார்கள் என்பதில் ஐயமில்லை.


2023ல் Tamilezuthapadi Publicationsவாயிலாக வெளியிடப்பட்ட புத்தகங்கள் அனைத்துமே ISBN பெறப்பட்டது. ISBN- Internatonal Standard Book Number. ஐ.எஸ். பி என் ஒரு புத்தகத்துக்கு இருந்தால் நூலகங்கள் பல்கலைக்கழகங்கள் புத்தக விற்பனையாளர்கள் புத்தகங்களை எளிதில் சந்தைப்படுத்த உபயோகிக்க ஏதுவாக இருக்கும்.


அங்கீகரிக்கப்படாத உலக சாதனைக்கு உரித்தானவர்களான Tamilezhuthapadi Publicationல் இம்முறை, 2024 ஆம் ஆண்டு ஒரு உலக சாதனைக்கு தயாராகிறார்கள். டிசம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை அன்று கின்னஸ் உலக சாதனை நிகழ்த்த தயாராகிறார்கள் 150 இளம் எழுத்தாளர்கள். இவர்கள் Read-A-Thon என்ற நிகழ்வை நிகழ்த்தப் போகிறார்கள். ஒரே பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்களை எழுத்தாளர் தான் எழுதிய புத்தகத்தை தானே படிக்கப் போகிறார். தொடர்ந்து 120 பேர் இடைவெளி இன்றி படிக்கப் போகிறார்கள். இது ஒரு தொடர் நிகழ்வு ஆகும்.


சிறுநடை போட்டு நடந்த நம் சிறுவர்கள் இன்று சீறிப்பாய காத்திருக்கிறார்கள்.


இந்த உலக சாதனை மூலம் 120-150 பேர் உலக சாதனை பங்கேற்பு சான்றிதழ் பெற்றாலும் குறைந்தது 500 எழுத்தாளர்கள் - Cumming Tamil School, JTM Tamil School, Fredrick Tamil School, Peachtree Tamil Schoolசேர்ந்தவர்கள் இந்த உலக சாதனை மூலம் வெளிச்சத்துக்கு வர காத்திருக்கிறார்கள்


Guinnes World Reccord சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ஆகும். அவர்களுக்கு கட்டணமாக மிகப்பெரிய தொகை செலுத்த வேண்டும். இது தவிர இம் மாபெரும் நிகழ்வை நடத்திக் காட்டவும் Tamilezuthapadi Publicationsகு உதவி தேவை. நம் குழந்தைகளை, மாணவர்களை, அறிவார்ந்த தமிழ் குழந்தைகளாக நம் தமிழ் பண்பாட்டை மொழியை அவர்கள் மூலமாகவே படைப்பாக்கி, புத்ததமாக்கி இலவசமாகவே தந்துள்ளார்கள் Tamilezuthapadi Publications


அவர்கள் அரியணை ஏற்ற நினைப்பது நம் பிள்ளைகளை அவர் துணை நிற்பது நம் கடமையாகும் நம்மால் இயன்ற ஒவ்வொரு வெள்ளியையும் (Each Dollar) ஒவ்வொரு மணித்துளியையும் (Volunteering) தந்து அவர்கள் கனவை நம் கனவாக்கிக் கொள்வோம்! நம் கனவு நனவாகும் பொறுப்பை நம் கையில் எடுப்போம்! நம் பிள்ளைகள் மகுடம் கட நாமும் பங்கேற்போம்!


“Support TEP's cause with donation Every dollar counts and brings us closer to their fundraising goal. Thank you for your generosity!”


https://www.gofundme.com/f/support-authors-tamil-literacy-help-us-set-a-guinness-record lang=en_US&utm_campaign=fp_sharesheet&utm_content=amp8_c&utm_medium=customer&utm_source_copy_link


- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us