/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
ஹூஸ்டனில் கலாச்சார விருந்தாக மலர்ந்த திருவிளையாடல் புராணம்
/
ஹூஸ்டனில் கலாச்சார விருந்தாக மலர்ந்த திருவிளையாடல் புராணம்
ஹூஸ்டனில் கலாச்சார விருந்தாக மலர்ந்த திருவிளையாடல் புராணம்
ஹூஸ்டனில் கலாச்சார விருந்தாக மலர்ந்த திருவிளையாடல் புராணம்
நவ 07, 2025

ஹூஸ்டன் (டெக்சாஸ்): தமிழ் பண்பாட்டின் ஆன்மீக ஒளி ஹூஸ்டனில் பிரகாசித்தது. ஓபு கிரியேஷன்ஸ் & ஃபாஷன் புரொடக்ஷன்ஸ் வழங்கிய திருவிளையாடல் புராணம் எனும் அரங்கேற்றம், இசை, நடனம், நாடகம் மற்றும் கதை சொல்லல் இணைந்த மாபெரும் நிகழ்ச்சியாக அனைவரையும் மயக்கியது.
சனிக்கிழமை மாலை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 231 பேர் பங்கேற்று அரங்கம் நிரம்பியது. மாலை 5.15 மணிக்கு தொடங்கி இரவு 9.00 மணிக்கு நிறைவுற்ற நிகழ்ச்சி முழுவதும் பார்வையாளர்கள் மெய் மறந்து ரசித்தனர்.
மிகை விருந்தினர்கள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீ சாய் பிரகாஷ் (அசிஸ்டன்ட் வைஸ் கவுன்சல், Accounts), கீதா ராவுலா (ஆசீர்வாத் ஃபவுண்டேஷன்), சுந்தர் அருண் மற்றும் மாலதி சுந்தர் (தலைவர், ஸ்ரீ மீனாட்சி கோவில்), சுபின் பாலகிருஷ்ணன் மற்றும் திருமதி சுபின் (அதிபர், குருவாயூரப்பன் கோவில்), மற்றும் சக்தி ராவணன் (இன்டர்நேஷனல் பறை இன்ஸ்டிட்யூட்) கலந்து கொண்டனர்.
ஆதரவாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் நிகழ்ச்சியின் தலைமை ஆதரவாளர்கள் மகேஷ் மற்றும் திவாகர் (வாசா ப்ரொமோட்டர்ஸ், டல்லஸ்). தங்க ஆதரவாளர்களாக பெனிதா பார்திபன் & விக்னேஷ் ஆல்வார் (சன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், சான் ஆன்டோனியோ) மற்றும் முரு மணிக்கம் & விஜி முரு (சிகாகோ) இருந்தனர். இவர்களின் பங்களிப்பு நிகழ்ச்சியை வெற்றிகரமாக்க முக்கிய காரணமாக அமைந்தது.
திரையின் பின்னால் மேடையில் 40 கலைஞர்கள் கலந்து கொண்டதோடு, 20க்கும் மேற்பட்ட பின்னணி குழுவினர் tirelessஆக உழைத்தனர். அழகான உடைகள் மற்றும் பொருட்களை லக்ஷ்மி டான்ஸ் அகாடமி, கீதா ராவுலா, மற்றும் QCloset வழங்கினர்.
மேக்கப் குழுவினரான சங்கீதா, துர்கா, நிலேஷா ஆகியோர் தெய்வீக வேடங்களை உயிர்ப்பித்தனர். இசை & கலையொளி ஹூஸ்டன் கலாக்ஷேத்ரா மற்றும் கலைகளம் ஆர்ட்ஸ் இணைந்து வழங்கிய வீணை-வைலின் இசை ரசிகர்களை மெய்மறக்க வைத்தது. பாடகர் சங்கர் அவர்களின் நேரடி பாடல் நிகழ்ச்சி கூட மிகுந்த பாராட்டைப் பெற்றது.
பார்வையாளர்களின் கருத்து-”இந்த நிகழ்ச்சி நம்மை சிவபெருமானின் தெய்வீக உலகிற்கே கொண்டு சென்றது,” என்று ஒருவரும், “ஒவ்வொரு அசைவிலும், ஒவ்வொரு இசையிலும் ஆன்மிக உணர்வு தெரிந்தது” என்று மற்றொருவரும் கூறினர்.
படைப்பாளர் பார்வை நிகழ்ச்சியின் இயக்குநரும் படைப்புத் தலைவருமான ஒபுளி கார்த்திக், மற்றும் ஓபு கிரியேஷன்ஸ் & ஃபாஷன் புரொடக்ஷன்ஸ் நிறுவனர் ஜானகி, அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தனர்: “இது ஒரு மேடை நிகழ்ச்சி மட்டுமல்ல — இது நம் பண்பாட்டை, தலைமுறைகளை இணைக்கும் ஒரு ஆன்மீகப் பயணம்,” என்று அவர்கள் கூறினர்.
அந்த இரவு நிறைந்த கைதட்டல்களுடன் நிறைவடைந்தது. ஓபு கிரியேஷன்ஸ் வழங்கிய இந்நிகழ்ச்சி, ஹூஸ்டனில் இந்தியக் கலை, பண்பாடு மற்றும் ஆன்மிகத்தைப் பரப்பும் மற்றொரு பெருமைமிகு அடையாளமாக அமைந்தது.
- சான் அன்டோனியோவிலிருந்து நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
Advertisement

