sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

செய்திகள்

/

அரிசோனாவில் சங்கர் நேத்ராலயாவுக்கு நிதிதிரட்டல்!

/

அரிசோனாவில் சங்கர் நேத்ராலயாவுக்கு நிதிதிரட்டல்!

அரிசோனாவில் சங்கர் நேத்ராலயாவுக்கு நிதிதிரட்டல்!

அரிசோனாவில் சங்கர் நேத்ராலயாவுக்கு நிதிதிரட்டல்!


நவ 08, 2025

Google News

நவ 08, 2025


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரிசோனாவில் சங்கர் நேத்ராலயாவுக்கு நிதிதிரட்டல்!
ஒரு அரிசோனன்
சங்கர் நேத்ராலாயா சிறந்த கண்மருத்துவப் பணிகளைச் செய்துவருவது அனைவரும் அறிந்ததே! லாபத்துக்குமாக மட்டும் நடத்தாமல், ஏழை எளியவருக்கு பணம் வாங்காமல் உதவிசெய்தும் வருகிறது இந்த நிறுவனம்.
இந்த நிறுவனத்தின் சிறந்த பணியைப் பாரட்டி, அது தழைத்தோங்க வேண்டி, அமெரிக்காவில் அரிசோனா மாநில இளைஞர் குழாம் (Phonix Youth, Arizona Team) மற்ற சங்கங்களுடன் இணைந்து, சிறப்பு நிகழ்ச்சி நடத்தி, அமெரிக்க சங்கர் நேத்ராலயாவின், 'ஒரு கிராமம் தத்தெடுப்போம்' (https://www.sankaranethralayausa.org/) என்ற கண் பராமரிப்பு முயற்சிக்காக $1,45,000 (₹1,20,35,000) நிதி திரட்டியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி நவம்பர் 2ல் மேசா நகரத்து 'மேசா கலைக்கூடத்தில் (Mesa Arts Center)' நடந்தேறியது. பதினாறு நடனக் குழுவில் பயிலும் 160 இளைய தலைமுறை ஆண்களும், பெண்களும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி முறைப்படி 'பார்வைக்காக ஆட்டம் (Dance for Vision)' என்ற நடன நிகழ்ச்சியை நடத்தினர். ஆடியவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பட்டயங்கள் வழங்கப்பட்டன.
நகைச்சுவை நடிகர் ராம்குமார், 'பார்வைக்காகச் சிரிப்பு' என்ற நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்தினார். தங்கரத்தினம், விஜய் ராஜ், ஷைனிங் ஸ்ப்ரௌட்ஸ் அறக்கட்டளைச் சேர்ந்த ஐவர், கண்புரை அறுவை சிகிச்சைக்காக ஒரு கிராமத்தை தத்தெடுத்தனர்
நிகழ்வை நடத்தியவர்கள், நிதி நல்கிய சூரி & சுஜாதா குன்னாலா, கந்தாலா & மாதவி ரெட்டி, ஆதி & ரேகா ரெட்டி, தங்கரத்தினம் & தமியா தேவி போன்றோரை மேடைக்கு அழைத்து கௌரவப் படுத்தினர்.
லாஸ் ஏஞ்சலீசில் இருக்கும் இந்தியத் தூதுவர் பதிவுசெய்யப்பட்ட பாராட்டை நல்கினார். சங்கர் நேத்திராலயா கலாக்ஷேத்திரா குழாமுக்கும், நிகழ்ச்சி வெற்றிகரமாக நடக்க உழைத்த ஸ்ரீநிவாச குப்தா உட்பட ஐம்பது தன்னார்வலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தனர்.
அரிசோனா மாநில வாழ் பாரத தேச மக்கள் நற்காரியத்திற்காக கோடிக்கணக்கில் நிதி தந்து உதவுவர் என்று செயலில் காட்டியமைக்கு அவர்களுக்கு நன்றி தெரிவிப்போமாக!- நமது செய்தியாளர் அரிசோனன்.


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us