sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

செய்திகள்

/

குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை ஹுஸ்டன் அரங்கேற்றிய அமர்க்களமான காதலர் தின விழா !

/

குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை ஹுஸ்டன் அரங்கேற்றிய அமர்க்களமான காதலர் தின விழா !

குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை ஹுஸ்டன் அரங்கேற்றிய அமர்க்களமான காதலர் தின விழா !

குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை ஹுஸ்டன் அரங்கேற்றிய அமர்க்களமான காதலர் தின விழா !


பிப் 25, 2026

Google News

பிப் 25, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹூஸ்டன் குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை (KKSF) சார்பில் நடைபெற்ற கலாச்சார காதலர் தின விழாவில், நடேசன் முர்த்தி மற்றும் லீலா முர்த்தி “ஆண்டின் சிறந்த தம்பதி” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

குடும்பப் பற்று, சமூகப் பணி, மற்றும் திருவள்ளுவர் போதிக்கும் உயரிய வாழ்வியல் மதிப்புகளை தங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தியதற்காக இவ்விருது வழங்கப்பட்டது.



பிரமாதமான இவ்விழா, மாலா கோபால் தலைமையிலும் ஆதி கோபால் ஒத்துழைப்பிலும் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கருத்தரங்கம், இலக்கிய நிகழ்வுகள், நினைவாற்றல் போட்டி, மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்தும் சந்திப்பு இடம்பெற்றன.



தமிழ் இலக்கிய ஆர்வலர் வாஞ்சி, இன்பத்துப்பால் அதிகாரங்களை அடிப்படையாகக் கொண்ட தனது புதிய கவிதைத் தொகுப்பை அறிமுகப்படுத்தினார்.

இதனுடன் இணைந்து நடைபெற்ற “சொல்வோம் வெல்வோம்” நினைவாற்றல் போட்டியில் ஷாந்தினி, காஞ்சனா, தனசேகரன் ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு 'வல்லாரைச் செடிகள்' பரிசாக வழங்கப்பட்டன.



இவ்விழா, திருவள்ளுவர் அவர்களின் போதனைகளை சமூக வாழ்வில் செயல்படுத்தும் KKSF இன் நோக்கத்தை மீண்டும் வலியுறுத்தியது.

தமிழ் மொழி, இலக்கியம், மற்றும் பண்பாட்டை தலைமுறைகள் கடந்து பேணிப் பரப்பும் முயற்சியின் இன்னொரு சிறப்பான படியாக இந்நிகழ்வு அமைந்தது.



- சான் ஆண்டோனியோவிலிருந்து நமது செய்தியாளர் ஷீலா ரமணன்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us