/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை குழந்தைகள் தின விழாவில் உலக சாதனை
/
குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை குழந்தைகள் தின விழாவில் உலக சாதனை
குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை குழந்தைகள் தின விழாவில் உலக சாதனை
குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை குழந்தைகள் தின விழாவில் உலக சாதனை
டிச 05, 2025
பியர்லேண்ட் (Pearland) அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயில் திருமண மண்டபத்தில், குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை (KKSF) குழந்தைகள் தின விழாவை சிறப்பாகக் கொண்டாடியது.
அருள்மிகு மீனாட்சி கோயில் நிறுவனம் (MTS), உயிர் அறக்கட்டளை (Uyir Foundation) மற்றும் ஹூஸ்டன் இளைஞர் இசைச் சங்கம் (HYMA) ஆகியவை இணைந்து நடத்திய இவ்விழாவில் பல்வேறு நகரங்களிலிருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இவ்விழா, தமிழ் மொழி, கலை, கலாச்சாரம் மற்றும் குழந்தைகளின் திறமையை முன்னிறுத்திய வண்ணம் கொண்டாடப்பட்டது.
1330 பங்கேற்பாளர்கள் ஒருவர் ஒரு திருக்குறளையும் அதன் பொருளையும் ஒரு நிமிடத்தில் ஒப்புவித்த KKSF உருவாக்கிய மாபெரும் சாதனை இவ்விழாவின் முக்கிய அம்சமாக அமைந்தது. அமெரிக்காவின் 10 முக்கிய நகரங்களில் நடைபெற்ற இந்த கலாச்சார முயற்சிக்கு 'ஸ்பாட்லைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' உலக சாதனை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
விழாவில் பியர்லேண்ட் மேயர் கெவின் கோல், ஹூஸ்டன் இந்திய துணைத் தூதர் டி.சி. மஞ்சுநாத், HCA ஹெல்த்கேர் சவுத் ஈஸ்ட் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் முசாத்திக் வாஹித் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். மேயர் கோல், தமிழ் பாரம்பரியத்தைப் பேணும் வகையில் KKSF மேற்கொண்டும் பணியைப் பாராட்டினார்.
இந்திய துணைத் தூதர் மஞ்சுநாத், தமிழில் உரையாற்றி, சூழலுக்கேற்ற திருக்குறள் மேற்கோள்கள் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தார்.
நுழைவு மண்டபத்தில் 'உலக கலைப் போட்டி' நடைபெற்றது. திருக்குறள்களின் ஊக்கத்தால் உருவான சர்வதேசக் கலைப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. பாரம்பரிய விளையாட்டுகளை குழந்தைகள் அனுபவிக்கும் வகையில் கீர்த்தனா பாரத் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்தார்.
மாலை நிகழ்வின் சிறப்பாக, கனடாவைச் சேர்ந்த Mega Tuners இசைக்குழு (அரவிந்தன் மகேசன் தலைமையில்) நேரடி இசை நிகழ்ச்சி வழங்கியது. உள்ளூர் பாடகர்கள் பலரும் இணைந்து கலைநிகழ்ச்சியை மேலும் உயர்த்தினர். மீரா ஸ்ரீகாந்த் இதனை ஒருங்கிணைத்து, பல ஒத்திகை அமர்வுகளின் மூலம் நிகழ்ச்சியை சிறப்பாக வடிவமைத்தார். ஹரிவராசனத்தின் ஒருமித்த வடிவத்தைப் பாடியபோது மாலை நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
பலமான மற்றும் உற்சாகமூட்டும் இசைக் கோர்ப்புகளான மருதமலை, சேவல் கொடி மற்றும் சிங்கார வேலவனே தேவா ஆகியவற்றை பார்வையாளர்கள் இரசித்தனர். இதில் இசைக்குழு மற்றும் பாடகர் இடையே சுவாரஸ்யமான ஸ்வரப் பரிமாற்றம் (swaramexchange) இடம்பெற்றது.
'வராக ரூபம்' பாடலின் போது, டாக்டர் கார்த்திக் ஓபுலி பஞ்சுருளியாக தோன்றியதோடு, அங்கிருந்தோரை உற்சாகத்தில் ஆழ்த்தி, புகைப்படம் எடுக்கத் தூண்டியது அன்றைய நிகழ்வின் மறக்க முடியாத தருணம் ஆகும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் இளைய கலைஞர்களின் மென்மையான நடனங்களால் அழகுபடுத்தப்பட்டு, பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்த காட்சித் தொடர்களாக அமைந்தன.
விழாவின் தடையற்ற செயல்பாட்டிற்கு அருணா விஜய், ஜானகி ஓபுளி, நந்து ராதாகிருஷ்ணன், பார்த்திபன் ரவிக்குமார், ஷிவானி சந்திரமோகன் உள்ளிட்ட சிறந்த அறிவிப்பாளர்கள், INIYA TV, ஆடியோ பொறியியல் குழு மற்றும் தன்னார்வலர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கினர். நிகழ்ச்சியின்போது ஹூஸ்டன் குமார் உணவகம் வழங்கிய இரவு உணவு பங்கேற்பாளர்களால் பாராட்டப்பட்டது.
நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைத்து நன்கொடையாளர்கள், விளம்பரதாரர்கள், கலைஞர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு KKSF தலைவர் மாலா கோபால் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
- சான் ஆன்டோனியோவிலிருந்து நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
Advertisement

