/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
நியூ ஹாம்ப்ஷயர் ஹிந்து கோயிலில் மகா ருத்ர உற்ஸவம்
/
நியூ ஹாம்ப்ஷயர் ஹிந்து கோயிலில் மகா ருத்ர உற்ஸவம்
நியூ ஹாம்ப்ஷயர் ஹிந்து கோயிலில் மகா ருத்ர உற்ஸவம்
நியூ ஹாம்ப்ஷயர் ஹிந்து கோயிலில் மகா ருத்ர உற்ஸவம்
ஜன 22, 2026

நியூ ஹாம்ப்ஷயர் ஹிந்து கோயிலில் மகா ருத்ர உற்ஸவம்
நாஷூவா, நியூ ஹாம்ப்ஷயர்:அமெரிக்காவின் பாஸ்டன் அருகே நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலயத்தில் (Hindu Temple of New Hampshire) மகா ருத்ர பூஜை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த ஆலயத்தில் சிவ பெருமான் நர்மதை லிங்கமாகவும், மீனாக்ஷி சுந்தரேஸ்வரர், மேதா தக்ஷிணாமூர்த்தியாகவும் அருள்பாலிக்கின்றனர். 2008-இல் நிறுவப்பட்டது முதல், காஞ்சி மகாபெரியவரின் நல்லாசியுடன் வருடம் தவறாமல் நடத்தப்படும் இந்த ஆன்மிக வைபவம், இந்த ஆண்டும் பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது.
அர்ச்சகர் பாலகிருஷ்ண சாஸ்திரிகள் தலைமையில் சத்யநாராயண பட்டர், பைரவசுந்தர சிவாச்சாரியார், சதீஷ் சர்மா, அஸ்வத் சாஸ்திரி, ராஜேஷ் வாத்தியார் உள்ளிட்ட நியூ இங்கிலாந்து பகுதியின் பல்வேறு கோவில்களின் சிவாச்சாரியார்கள் மற்றும் வைதீக வல்லுநர்கள் வேத பாராயணம் செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட ரித்விக்குகள் 1331 முறை ஸ்ரீ ருத்ர மந்திரங்களை பாராயணம் செய்தனர். உலக நலன் வேண்டி ருத்ர ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிவலிங்கத்திற்கு விசேஷ அபிஷேகங்களும், அலங்காரமும் செய்யப்பட்டன.
இந்த ஆண்டு மகா ருத்ரத்தன்று அதிகாலையிலேயே எதிர்பாராத விதமாகப் பரவலாகப் பனிப்பொழிவு ஏற்பட்டு, ஒட்டுமொத்தப் பகுதியையும் வெண் போர்வை போர்த்தியது போலக் காட்சி அளித்தது. சாலைகளில் பனி விழுந்து போக்குவரத்து மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியதோடு, உறைபனி குளிரும் (மைனஸ்-5°C) நிலவியது. இத்தகைய சவாலான சூழலிலும், லோக க்ஷேமத்திற்காக நடத்தப்படும் இந்த வேள்வியில் பங்கேற்க, *'ரித்விக்' என அழைக்கப்படும் வேத வித்தர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
பெண் தன்னார்வலர்கள் அதிகாலையிலேயே சமையல் பணிகளைத் தொடங்கினர். வாழை இலையில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. வெளிநாட்டில் இத்தனை இயற்கைச் சவால்களுக்கு மத்தியிலும், சம்பிரதாயம் மாறாமல் இந்த விழாவைச் சிறப்பாக ஒருங்கிணைத்த கோவில் நிறுவனர் வீரமணி ரங்கநாதன் கூறும்போது, மகாபெரியவரின் அருள் தான் இதை நடத்தி வைக்கிறது என்றார்.
Advertisement

