sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

செய்திகள்

/

நக்கீரர் பட்டிமன்றக்குழுவின் சிறப்புப் பட்டிமன்றம்

/

நக்கீரர் பட்டிமன்றக்குழுவின் சிறப்புப் பட்டிமன்றம்

நக்கீரர் பட்டிமன்றக்குழுவின் சிறப்புப் பட்டிமன்றம்

நக்கீரர் பட்டிமன்றக்குழுவின் சிறப்புப் பட்டிமன்றம்


நவ 05, 2024

Google News

நவ 05, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நபமகு (நக்கீரர் பட்டிமன்றக் குழு)வின் சிறப்புப்பட்டிமன்றம் அக்டோபர் 27, 2024 மாலை நடைபெற்றது. கலிபோர்னியா விரிகுடாப்பகுதி ரியல்டர்களான ஹேமா சங்கர், ராஜா குமார் ஆகியோரிடம் பார்வையாளர்கள் முன்னரே அனுப்பியிருந்த கேள்விகளைத் தேர்ந்தெடுத்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நாச்சம்மை செல்லப்பன் கேட்க மிக அருமையான பதில்களை இருவரும் கூறினர். அபுகானின் வரவேற்புரையில், வட அமெரிக்காவில் தன்னிறைவு பெற்ற பட்டிமன்றக்குழுவின் தேவையையும் அத்தேவையை நிறைவுசெய்யத் துவங்கப்பட்ட நக்கீரர் பட்டிமன்றக்குழுவின் செயல்பாடுகளையும் தன் கணீர்க்குரலில் எடுத்துரைத்தார்.

அதன்பின்னர் நடுவர் ஜேசு சுந்தரமாறன் தலைப்பை விளக்கி பேச்சாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். நபமகு-வில் புதிதாக இணைந்திருக்கும் பேச்சாளர்களை அறிமுகப்படுத்தியதும் தமிழகத்திலுள்ள பட்டிமன்றத்தின் தலைசிறந்த நட்சத்திரப் பேச்சாளர்கள் எவ்வித எதிர்பார்ப்புமின்றி இங்குள்ள நபமகு-வின் பேச்சாளர்களுக்கு இலவசமாக ஆலோசனைகள் வழங்குவதைக் குறிப்பிட்டு நன்றி பாராட்டியதும் மிகச்சிறப்பு!


“அமெரிக்க மண்ணில் வீடு வாங்குவது சுகமா? சுமையா?” என்ற தலைப்பில் “சுகம்” என்ற அணியில் வித்யா ஜெய்கணேஷ், அருண் இராசேந்திரன், காயத்ரி வித்யானந்த் ஆகியோரும், “சுமை” என்ற அணியில் சரண்யா தினேஷ், மனோஜ் மலரழகன், அபு கான் ஆகியோரும் வலுவான கருத்துகள், தேவையான அளவு நகைச்சுவைத்துணுக்குகள், தங்களின் சொந்த அனுபவங்கள், எதிரணி பேச்சாளர்களுக்கான பதிலுரைகள், செல்லத்தாக்குதல்கள், நிகழ்காலத்திரைப்படங்களின் பெயர்கள், பாடல்வரிகள், பஞ்ச் வசனங்கள் ஆகியவற்றை பார்வையாளர்களின் ஆர்வம் குன்றாமல் சரியான விகிதத்தில் கலந்து மிகச்சிறப்பாக தொழில்முறைப் பேச்சாளர்களுக்கிணையாகப் பேசியதும் பேச்சாளர்களைக் குறுக்கிட்டு நடுவர் ஜேசு அதிக நேரமெடுக்காமல் துரிதமாக அவர்கள் பேசியதைப்பாராட்டி மேலும் மெருகேற்றிப் பேச்சாளர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவித்ததும் பார்வையாளர்களின் கைத்தட்டல்களின் மூலமாகவும் மகிழ்வின் வெளிப்பாடான சிரிப்பொலிகள் மூலமாகவும் அரங்கத்தை நிறைத்தது சுகம்!

நடுவர் ஜேசு, இரு அணியினரின் வாதங்களிலும் சிறப்பான கருத்துகளையெல்லாம் தொகுத்துக்கூறி சீர்தூக்கிப்பார்த்து அமெரிக்காவில் சொந்த வீடு வாங்குவது சுகமே என்ற தீர்ப்பை வழங்கினார். ஒவ்வொரு பேச்சாளரும் பேசி முடித்ததும் அவர்களின் சிறப்பையும் அவர்கள் பேசியதில் சிறந்ததையும் குறிப்பிட்டு பார்வையாளர்களை பேச்சாளர்களுக்கு உற்சாகக்கரவொலி எழுப்பச்சொன்னது மிகவும் சிறப்பு!


நக்கீரர் பட்டிமன்றக் குழுவின் நன்றி நவிலல்

இந்த அழகிய நிகழ்ச்சியை நடத்த நிதியுதவியை அளித்த வளைகுடா பகுதியின் வீட்டு முகவர்கள் ராஜா குமார், ஹேமா சங்கர், கெளதம், அம்பரின், மேலும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடக்க ஒலி, ஒளி அமைத்த இளையா (Maestero Media Service )மற்றும் அரங்க அமைப்பை ஒருங்கு செய்ய உதவி புரிந்த தன்னார்வலர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்


உங்கள் அனைவரின் ஊக்குவிப்பாலும் ஒத்துழைப்பாலும் மேலும் பல நிகழ்ச்சிகளை உருவாக்கி வட அமெரிக்காவில் தமிழோசை பரவிடச்செய்வோம் என்று உறுதி அளிக்கிறோம்!

'தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்!!'


நன்றி, நக்கீரர் பட்டிமன்றக் குழு!

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்


https://www.youtube.com/watch?v=wPupUSlJoVM


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us