sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

செய்திகள்

/

வட அமெரிக்க முருகன் கோவில் - தைப்பூசம் திருவிழா

/

வட அமெரிக்க முருகன் கோவில் - தைப்பூசம் திருவிழா

வட அமெரிக்க முருகன் கோவில் - தைப்பூசம் திருவிழா

வட அமெரிக்க முருகன் கோவில் - தைப்பூசம் திருவிழா


பிப் 16, 2025

Google News

பிப் 16, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வட அமெரிக்காவின் முதல் பிரமாண்டமான முருகன் கோவில் மேரிலாந்து மாகாணத்தில் அமைந்துள்ளது. “தமிழால் இணைவோம் முருகன் அருள் பெறுவோம்” என்ற தமிழ் உணர்வோடு கூடிய இந்த ஆன்மீக தலைப்போடு பக்தர்களைப் பரவசப்படுத்தி இக்கோவில் சிறப்பாக இயங்கி வருகின்றது. பிப்ரவரி 15-ஆம் நாள் சனிக்கிழை அன்று தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாக வட அமெரிக்க முருகன் கோவிலில் கொண்டாடப்பட்டது.
தைப்பூசம் விழாவை இந்துக்கள் குறிப்பாகத் தமிழர்கள் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் சனவரி மாதம் கொண்டாடுகிறார்கள். தமிழ் முதற்கடவுள் முருகப்பெருமான் தனது தாயிடம் இருந்து சக்தி வேலினைப் பெற்ற தினம் தைப்பூசமாகக் கொண்டாடப் படுவதாகக் கூறுவர். தைப்பூசம் என்பது முக்கியமாக முருகப் பெருமானைச் சார்ந்த விழா என்றாலும், அந்த விழாவினை சிவன் மற்றும் முருகன் ஆலயங்களிலும் கொண்டாடுகிறார்கள்.
பயம், வெறுப்பு, பொறாமை மற்றும் தலைக்கனம் என்ற தீய குணம் கொண்டவர்களை ஒளி மற்றும் ஞானம் என்பதைக் குறிக்கும் அந்த சக்திவேலினை கையில் ஏந்திக் கொண்டு உலகில் அறியாமை மற்றும் தீயவற்றை விலக்கி அமைதியையும் நல்ல அருளையும் தருகின்றார் முருகன்.

பால்குடம் மற்றும் காவடி ஏந்தி பக்தர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தோடு வந்து இத்தைப்பூச திருவிழாவில் கலந்து கொண்டனர். பக்தர்கள் ஆறுமுகனின் அழகைக் கண்களால் கண்டு அவன் மீது இருக்கும் மலர்களின் வாசனையில் மனம் மயங்கி, முருகனின் மூலம் மந்திரத்தைச் செவிகளால் கேட்டு மனம் உருகித் தரிசித்து நல்லாசி பெற்றார்கள். பின்னர் 108 சங்கு அபிஷேகம் கொண்ட தீபாராதனையும் முருகன் திருக்கல்யாணமும் நடைபெற்றது.


மலேசியத் தமிழ்ச் சமூகமும் தைப்பூசத் திருவிழாவும்:

மலேசியத் தமிழர்களுக்கு முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா ஆன்மிகத்திற்கும் கலாச்சாரத்திற்கும் உறுதுணையாக விளங்குகின்றன. சிலாங்கூரில் உள்ள பத்து மலை முருகன் கோவில் மலேசியாவில் மட்டுமின்றி, உலகளாவிய தமிழர்களுக்கும் ஒரு பெரும் பக்தி நிலையமாக திகழ்கிறது. இந்தியா வெளியே தைப்பூசம் மிக விமர்சையாக கொண்டாடப்படும் முக்கியமான இடங்களில் மலேசியா முன்னணி இடம் பிடிக்கிறது.


வட அமெரிக்க முருகன் கோவிலிலும் தைப்பூசம் சிறப்பாக நடைபெறுகிறது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்காவில் வாழும் மலேசியத் தமிழர்கள் மிகுந்த பக்தியுடன் தைப்பூசத் திருவிழாவை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். முன்னதாக, கோவிலில் உணவுக்கூடம் ஏற்படுத்தப்படுவதற்கு முன், பல குடும்பங்கள் தங்களது வீடுகளில் சமையல் செய்து, அதை அன்னதானமாக வழங்குவது வழக்கமாக இருந்தது. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக, கோவிலில் உள்ள சமையலறையிலேயே 1500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார்கள்.

தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள்:


காவடி ஆட்டம்: பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக காவடிகளை தூக்கி, முருகனின் திருவுளத்தை அடைய பயணம் செய்கிறார்கள். பால்குடம்: பக்தர்கள் பால் குடங்களை ஏந்தி, நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். தைப்பூசம் என்பது பக்தியின் உச்சமாக மட்டுமல்ல, தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஆன்மிக, கலாச்சார பெருவிழாவாகவும் திகழ்கிறது. வட அமெரிக்க முருகன் கோவிலில் நடைபெறும் தைப்பூசக் கொண்டாட்டங்கள், அமெரிக்கா முழுவதும் இருந்து பக்தர்களை ஈர்க்கும் அளவிற்கு பிரசித்தி பெற்றவை. இதன் மூலம் பக்தி, ஒற்றுமை, தமிழ் அடையாளம் ஆகியவை சிறந்து விளங்குகின்றன.


முருகன் அருள் பெற்ற பக்தர்கள் அனைவருக்கும் வாழை இலையுடன் கூடிய மதிய உணவு தன்னார்வலர்களால் அன்னதானமாக வழங்கப்பட்டது. சிறுவர்கள், பெற்றோர்கள் மேலும் முதியவர்கள் என அனைவரும் வட அமெரிக்க முருகன் கோவிலில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் பங்கு பெற்று அருள் பெற்றனர்.


நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us