/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
சிகாகோ திருக்குறள் மாநாட்டில் திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த ஆய்வுநூல் வெளியீடு
/
சிகாகோ திருக்குறள் மாநாட்டில் திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த ஆய்வுநூல் வெளியீடு
சிகாகோ திருக்குறள் மாநாட்டில் திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த ஆய்வுநூல் வெளியீடு
சிகாகோ திருக்குறள் மாநாட்டில் திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த ஆய்வுநூல் வெளியீடு
ஏப் 10, 2024

ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாடு, ஏப்ரல் 5-7, 2024 தேதிகளில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்றது. விழாவில் உலகத்தின் பல நாடுகளிலிருந்து ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், திருக்குறள் ஆர்வலர்கள், அமெரிக்காவின் பல்வேறு தமிழ்ச்சங்க மக்கள், மாணவர்கள் என்று அனைவரும் சங்கமிக்கும் ஒரு பெரும் மாநாடாக நடந்தேறியது. இம்மாநாட்டை சிகாகோ தமிழ்ச்சங்கம் முன்னெடுத்து பல அமைப்புகளையும் ஒருங்கிணைத்து செய்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக தமிழறிஞர் சாலமன் பாப்பையாவால், வலைத்தமிழ் பதிப்பக வெளியீடாக வந்துள்ள உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் (Thirukkural Translations in World Languages) என்ற ஆங்கில நூல் வெளியிடப்பட்டது. இந்நூலை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவைத் தலைவர் முனைவர். பாலா சாமிநாதன் , சிகாகோ தமிழ்ச்சங்கத் தலைவர் நம்பிராஜன் வைத்திலிங்கம், முனைவர் மருதநாயகம் , ஹார்வார்ட் தமிழிருக்கை புரவலர்கள் விஜய் ஜானகிராமன், சம்மந்தம் , திருக்குறள் ஆர்வலர் தாமஸ் ஹிட்டோஷி புருக்ஷ்மா உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
இதற்கான ஒருங்கிணைப்பை சிகாகோ தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் சரவணக்குமார் மணியன் , நூலாசிரியர்கள் இளங்கோ தங்கவேல் (மிசௌரி) , செந்தில் துரைசாமி (டெக்ஸாஸ்) செய்திருந்தனர்.
இது நூல் வெளியீடு மட்டுமல்ல , திருக்குறள் 2030 என்று அடுத்தக்கட்ட திட்ட இலக்கில் இன்னும் 158 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கவேண்டும் என்ற பரப்புரையை முன்னெடுத்து விழிப்புர்ணர்வு ஏற்படுத்தி வாய்ப்புள்ள வழிகளில் அனைத்து மொழிபெயர்ப்புகளை செய்துமுடித்து உலக மக்கள் அவரவர் தாய்மொழியில் அறிந்துகொள்ளும் வகை செய்தல் வேண்டும் என்ற பயணத்தில் பலரும் கைகோர்த்து உதவிவருகிறார்கள். உங்கள் நாட்டில், மாநிலத்தில் இந்த திருக்குறள் பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நூலை அறிமுகப்படுத்த விரும்பினால் தொடர்புகொள்ளவும்.
தமிழில் பிறந்தநாள் பாடலை அறிமுகப்படுத்தி உலகத்தமிழர்களிடம் கையளித்த நிலையில், அதையடுத்து , நாம் குழுவாக கையில் எடுத்துள்ள இரண்டாவது மிக முக்கிய ஒரு செயலாக திருக்குறள் சார்ந்த இத்திட்டத்தைப் பார்க்கிறோம். தனிமனித மாற்றமே சமூக மாற்றம். அந்த தனிமனித மாற்றத்திற்கான திறவுகோல் திருக்குறளில் உள்ளது. இதை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம் என்ற வகையில் அமைப்புகள், நாடுகள், எல்லைகள் கடந்து தமிழாக , திருக்குறளாக ஒன்றிணைந்து 2030 இலக்கை செய்துமுடிப்போம். தொடர் ஒத்துழைப்பு, ஊக்கம் நல்கும் அனைவருக்கும் நன்றி..
வெளியிடப்பட்ட நூலின் விவரம்: 218 பக்கங்கள் , முழு வண்ண நூல், வலைத்தமிழ் பதிப்பகம்,
நூலை வாங்க:
https://estore.valaitamil.com/
(அமெரிக்கா, இந்தியா)
நூல் மதிப்புரை செய்ய , நூலாசிரியர்களிடம் நேர்காணல் செய்ய , திருக்குறள் 2030 திட்டம் குறித்த முழுவிவரம் அறிய , உங்கள் நாடுகளில் இதை அறிமுகப்படுத்தி முன்னெடுக்க தொடர்புகொள்ளவும்.
தொடர்புக்கு:
காணொளிச் செய்தியைக்காண: https://youtu.be/y2Ae9Bf-iI8
அடுத்தடுத்து வெளியீடுகள் சிங்கப்பூர், மலேசியா என்று பல நாடுகளில் ஆங்காங்குள்ள அமைப்புகளால் திட்டமிடப்பட்டுள்ளது. .
விரிவான ஊடகச் செய்தியைக்காண: https://www.valaitamil.com/Thirukkural-translations-in-world-languages-book-release_21164.html
- நமது செய்தியாளர் சித்ரா சிவகுமார்
Advertisement