/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
சாக்ரமென்டோ 2024 தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
/
சாக்ரமென்டோ 2024 தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
மே 05, 2024

கலிஃபோர்னியா, சாக்ரமென்டோ தமிழ் மன்றம் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா, மே 4 ஆம் தேதி அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. சாக்ரமென்டோ தமிழ் மன்றம் ஆண்டுத்தோறும் நடத்தும் இந்நிகழ்ச்சியில் தமிழ் பள்ளிகள் மற்றும் தமிழ் குடும்பங்கள், இத்தினத்தன்று கொட்டு மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் கடலென திரண்டு வந்து தங்கள் பங்களிப்பை காட்டினர்.
நடனம், நாடகம் , பாடல் என பல்வேறு நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடைபெற்றது. சிறுகுழந்தைகள் முதல் பெரியோர்வரை மிகவும் ஆர்வமுடன் கலைநிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழ் குடும்பங்கள் மட்டும் அல்லாமல் பிற மொழி பேசுபவர்களும் இந்நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதை தமிழ்மன்ற தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பொறுப்புடன் ஆண்டுதோறும் வழிநடத்தி செல்வது பாராட்டுக்குரியது
- தினமலர் வாசகி சந்தியா நவீன்
Advertisement