sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 26, 2025 ,புரட்டாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

செய்திகள்

/

டெக்சாஸ் ஹுஸ்டன் மாநகரில் தமிழ் ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் விழா கொண்டாட்டம்

/

டெக்சாஸ் ஹுஸ்டன் மாநகரில் தமிழ் ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் விழா கொண்டாட்டம்

டெக்சாஸ் ஹுஸ்டன் மாநகரில் தமிழ் ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் விழா கொண்டாட்டம்

டெக்சாஸ் ஹுஸ்டன் மாநகரில் தமிழ் ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் விழா கொண்டாட்டம்


செப் 25, 2025

Google News

செப் 25, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இது தமிழர்களுக்கான பண்டிகைக் காலக்கட்டத்தின் தொடக்கம். பண்டிகைகளைத் தொடங்கும்போதே ஆரவாரத்துடன் தொடங்கினால் அதன் மகிழ்ச்சிக்கு எல்லை ஏதும் உண்டோ? இல்லைதானே..? ஆம், அவ்வகையில் டெக்சாஸ் மாகாணம் ஹுஸ்டன் மாநகரில் பியர்லேண்ட் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி திருக்கோயில் கல்யாண மண்டபத்தில் சென்ற சனிக்கிழமையன்று அமெரிக்கத் தமிழ்க்கலைக் கூடத்தின் முன்னோடியான மறைந்த நாடக இரத்னா அனந்தா நிறுவிய தமிழ் ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் தமது 48-ஆண்டுவிழாவைக் கொண்டாடியது.

அமரர் அனந்தா கலையார்வமிக்க உள்ளூர் அன்பர்களைக்கொண்டும், இளம் தலைமுறையினருக்கு அவர்களது கலைத்திறன் வெளிப்பட வாய்ப்புகள் பல வழங்கியும் ஆண்டுக்கொரு நாடகம் அரங்கேற்றுவது வழக்கம். அவர் மறைந்திருந்தாலும் அவர்தம் குடும்பத்தினர் மற்றும் அவர் வளர்த்த கலையன்பர்கள் பலரும் இணைந்து அவரது தமிழ் நாடகக்கலை இலக்கை என்றும் நினைவுகூறும் விதத்தில் நாடக அரங்கேற்றம் செய்துவருகின்றனர்.

நேற்று-இன்று-நாளை
அத்தருணத்தில் கால மாற்றத்திற்கேற்ப புதிய தலைமுறையினர் மற்றும் நவீனத் தொழில்நுட்பத்துடன் தம்மை மறுவடிவம் செய்துகொண்ட தமிழ் ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் 2.0, தமது இரண்டாவது படைப்பாக “நேற்று-இன்று-நாளை” எனும் புதிய வடிவிலான மூன்று வித நாடகங்கங்களை அரங்கேற்றியது.
முத்தமிழில் மூன்றாம் இடம்பெற்ற நாடகக் கலையையே மூன்று வடிவங்களாய்ச் சித்தரித்து தமிழ் நாடக உலகில் ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தியது பெரிதும் கவனம் பெற்றது. ஆம், கால ஓட்டத்தின் கண்ணாடியாக கடந்த காலம், நடப்புக் காலம், எதிர்வரும் காலம் என முக்காலத்திலும் நம் சமூகத் திருமணங்கள் எவ்வாறு காலமாற்றத்திற்கேற்ப நடைபெறுகின்றன என்பதனைக் காட்சிவடிவில் வெளிப்படுத்தியது.

நாடகத் தொடக்கமாக, கடந்த கால திருமண நிகழ்வு நடைமுறையை “நேற்று” என்ற வடிவில் நட்ராஜ் கிருஷ்ணன் கதைக்களமாக அமைத்து நாடக ஆக்கம் செய்திருந்தார். அவர், காதல் மணம் விரும்பும் இளையோரை இணைத்துவைக்க ஜாதகத்தை எப்படி தமக்கு சாதகமாக்கிக்கொள்கின்றனர் என்பதனைக் காட்சிப்படுத்தியிருந்தார், குடும்பத்துப் பெரியவர்களே இளையோர் மனம் கோணாதிருக்க மனமுவந்து அறிவுறுத்திய பரிகாரத்தின் வாயிலாக மணம் முடித்துவைக்க முடியும் என்பதையும் நாடகம் உணர்த்தியது. அக்கால நடைமுறையை அப்படியே காட்சிப்படுத்தி, வீரிய வசனங்கள் மற்றும் நகைச்சுவையாக அரங்கேற்றியது, அனைவரும் வெகுவாக இரசிக்கும்படி அமைத்திருந்தது.

அதனையடுத்து நடப்புக் காலக்கட்டத்தில் முதிய தலைமுறைக்கும் புதிய தலைமுறைக்கும் எப்பொழுதும் ஒரு இனம் புரியாத இணக்கம் இருப்பதனை கதைக்கருவாகக் கொண்டு நந்து இராதாகிருஷ்ணன் அவர்கள் நாடக ஆக்கமாக காட்சிப்படுத்தியதுதான் “இன்று” என்ற வடிவிலான நாடகம். தாத்தாவும் பாட்டியும் தத்தமது பேரப்பிள்ளைகளின் காதலை இணைத்துவைக்க குடும்பத்தினரையும் மீறி தீட்டிய திகைக்க வைக்கும் திட்டமே கதையின் மூலமாக அமைத்திருந்தது. அதனை காலத்திற்கேற்ப ஆடல்,பாடல் மற்றும் நகைச்சுவை அனைத்தும் கலந்த ஓர் இரசிக்கும் கலவையாகத் தந்திருந்தது பார்வையாளர்களைக் கவர்ந்திருந்தது.

இறுதியாக நவீனத் தொழில்நுட்பக் காலத்தில் செயற்கை நுண்ணறிவு கோலோச்சும் நிலையில் எதிர்காலத்தில் (நாளை) திருமணம் இப்படியும் நடக்கலாம் என்பதைக் கணிப்பதாக அமைந்திருந்து ”நாளை” எனும் நாடகம். இருமணம் இணைந்தால் மட்டும் போதும் நம் சமூகக் கட்டமைப்பில் எளிதாகத் திருமணம் செய்திடலாம் என்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதைப் படம்பிடித்துக் காட்டியது இந்நாடகம்.

இன்றைய இளம் தலைமுறையினருக்கு சமூகப் பழக்க வழக்கங்கள், வரலாறுகள் போன்றவற்றிற்குத் துணையாக இருப்பது தோள் கொடுப்பான் தோழன் எனும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளே.. ஆக, அதன் துணைகொண்டு மணம் முடிக்கத் திட்டமிடுகின்றனர் இளமனங்கள் இருவர். அவர்கள், தம் குடும்பத்தினரைச் சம்மதிக்கவைக்க புதிய வழிமுறையைக் கையாண்டு, சோதனைகள் வாயிலாக நிரூபணம் செய்து தாம் நினைத்தைச் சாதிகின்றனர். புதுவகையான காட்சிகள் அமைத்து மிக அழகாக்க கோர்வையாக அரங்கேற்றம் செய்திருந்தார் மருத்துவர் வடுகநாதன் . ஆக, மேற்சொன்ன முப்பரிமாணக் காதல் திருமணக் கதைக்களத்தை நாடக வடிவில் அரங்கேற்றத் திட்டமிட்டு மூன்று நாடகக் ககதாசிரியர்களுக்கும் ஊக்கமளித்திருந்தார் புதிய தலைமுறை இயக்குநரும், அமரர் அனந்தா புதல்வியுமான இலக்குமி பாவா நாடகங்களில் இளம் தலைமுறையினர் பலரையும் அறிமுகப்படுத்தி சிறந்த வகையில் தயாரிப்பு மேற்பார்வையும் செய்திருந்தது பெரிதும் குறிப்பிடத்தக்கது .

நாடக இறுதியில் இயக்குநர் இலக்குமியின் கலைச் சேவையைப் பாராட்டி நாடக நண்பர்கள், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பாரதி கலை மன்றத்தினர் அனைவரும் இணைந்து நினைவுப்பரிசை வழங்கினர். தொடர்ந்து, பார்வையாளர்கள் பாராட்டு வழங்க, மன்ற நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். வருகை தந்திருந்த அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பெற்று நாடக நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

---அமெரிக்காவில் இருந்து நமது தினமலர் வாசகர் கரு.மாணிக்கவாசகம்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us