PUBLISHED ON : ஜன 16, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டயர்களுக்கு கறுப்பு நிறம் ஏன்
வாகனங்களில் அதன் நிறங்கள் வேறுபட்டாலும், அவற்றின் சக்கர டயர்கள் கறுப்பு நிறத்தில் தான் இருக்கும். துவக்க காலத்தில் வெள்ளை நிறத்தில் டயர் தயாரிக்கப்பட்டது. ஆனால் அவை நீண்டகாலம் உழைக்கவில்லை. அதனால் துாய்மையான ரப்பருடன் 'கார்பன் பிளாக்' வேதி சேர்மத்தை கலந்து டயர்கள் தயாரிக்கப்பட்டன. இதனால்தான் டயர் கறுப்பாக உள்ளது. உராய்வு காரணமாக டயரில் ஏற்படும் வெப்பத்தை 'கார்பன் பிளாக்' கடத்துவதால், டயருக்கு நீண்டஆயுள் கிடைக்கிறது. சூரியனின் புற ஊதாக்கதிர்களை ஈர்த்து, வாகனத்தின் மற்ற பகுதி வெப்பமாகாமல் தடுக்கிறது.