/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : டைனோசரின் கால்தடம்
/
அறிவியல் ஆயிரம் : டைனோசரின் கால்தடம்
PUBLISHED ON : ஜன 10, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
டைனோசரின் கால்தடம்
பூமியை தாக்கிய விண்கற்களால் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன் டைனோசர் இனம் முற்றிலும் அழிந்தது. இந்நிலையில் பிரிட்டனில் 200 டைனோசர்களின் கால் தடத்தை , ஆக்ஸ்போர்டு, பிர்மிங்ஹாம் பல்கலை விஞ்ஞானிகள் இணைந்து கண்டறிந்துள்ளனர். ஆய்வுக்குழுவை சேர்ந்த 100 பேர் 2024 ஜூனில் ஒரு வாரத்துக்கு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு முடிவில் டைனோசர்களின் ஐந்து வழித்தடம் கண்டறியப்பட்டது. இதில் ஒன்றின் நீளம் 490 அடி. இது உலகில் இதுவரை கண்டறியப்பட்ட டைனோசர்களின் கால் தடங்களில் பெரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.