sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஆர்வக்கோளாறு!

ஆர்வக்கோளாறு!

ஆர்வக்கோளாறு!


PUBLISHED ON : மே 23, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 23, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர், அரசு ஆரம்பப்பள்ளியில், 1964ல், 4ம் வகுப்பு படித்தேன். பள்ளியில் புதிதாக சேர்ந்திருந்த ஆசிரியை இந்திராணி, எங்கள் வகுப்பாசிரியராக நியமிக்கப்பட்டார். வகுப்பறையில் மாணவர்களை அன்புடன் கவனித்துக் கொண்டார்.

ஒரு நாள், நான் உள்ளிட்ட நான்கு மாணவர்கள், ஆசிரியை வீடு எங்குள்ளது என்பதை தெரிந்து கொள்ள விரும்பினோம். அறியாத வயதின் ஆர்வக் கோளாறால், பள்ளி முடிந்ததும் ஆசிரியையை பின் தொடர்ந்து சென்றோம். பள்ளியில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் அவர் வீடு இருந்தது.

வீட்டின் அருகில் சென்ற போது, அவர் எங்களை கண்ணுற்று திடுக்கிட்டார். 'எப்படி வந்தீர்கள்...' என்று கேட்டார். நாங்கள் உண்மையை ஒப்புக் கொண்டோம். 'இவ்வளவு துாரம் எல்லாம் வரக்கூடாது. வழிமாறி சென்றுவிடும் வாய்ப்புண்டு.பெரியவர்களின் துணையோடு தான் எங்கும் செல்ல வேண்டும்...' என்று அறிவுரை கூறினார்.

வீட்டில் அமர வைத்து, காரப்பொரி மற்றும் காபி கொடுத்து, கனிவுடன் உபசரித்தார். பின், எங்கள் வீடு வரை அழைத்து வந்து, பெற்றோரிடம் ஒப்படைத்தார். அவர் கூறிய அறிவுரை பசுமரத்தாணி போல மனதில் பதிந்தது.

என் வயது, 71. சிறுதொழில் நிறுவனம் நடத்தி வருகிறேன். ஆசிரியை இந்திராணி கூறிய அறிவுரையையே என் பேரக்குழந்தைகளுக்கும் கூறி, அவர்களை வழிநடத்தி வருகிறேன். ------

-பி.ராமசாமி, திருப்பூர்.தொடர்புக்கு: 99948 13620

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us