PUBLISHED ON : ஜன 01, 2026

தமிழகம்
மார்ச்1: சென்னை வானிலை மையத்தின் தென் மண்டல தலைவராக அமுதா பதவியேற்பு.
மார்ச்8: விருதுநகர் சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலில் தினமும் காலை மணி 6:00 - 10:00 வழிபட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி.
மார்ச்17: சபாநாயகருக்கு எதிரான அ.தி.மு.க., வின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி.
மார்ச்22: லோக்சபா தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என சென்னையில் நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் 23 கட்சிகள் தீர்மானம்.
மார்ச்25: கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹூசைனி 60, காலமானார்.
மார்ச்26 : சென்னையில் ஒரு மணி நேரத்தில் 6 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட மஹாராஷ்டிராவின், ஈரானிய கொள்ளையன் ஜாபர் குலாம் உசேன் 'என்கவுன்டரில்' சுட்டுக்கொலை.
* அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன் 76, காலமானார்.
இந்தியா
மார்ச்2: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தன் அரசியல் வாரிசாக அறிவித்த சகோதரர் மகன் ஆகாஷ் ஆனந்தை கட்சியில் இருந்து நீக்கினார்.
மார்ச்4: அகிம்சை, உலக சகோதரத்துவத்தை வலியுறுத்தி உலகின் முதல் அமைதி மையம் ஹரியானாவின் குருகிராமில் தொடங்கப்பட்டது.
மார்ச்5: இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய சோலார் மின் உற்பத்தி நிலையம் குஜராத் கொசம்பாவில் திறப்பு.
மார்ச்9: மத்திய பிரதேசம் மாதவ், இந்தியாவின் 58வது புலிகள் காப்பகமாக அறிவிப்பு.
மார்ச்17: மகாராஷ்டிரா பிவான்டி நகரில் மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு முதன்முறையாக கோயில் திறப்பு.
* நாக்பூரில் முகலாய மன்னர் அவுரங்கசீப் நினைவிடத்தை அகற்ற கோரி போராட்டம். 30 பேர் காயம்.
* டில்லியில் பிரதமர் மோடி - நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் சந்திப்பு. ராணுவம், கல்வி, பருவநிலை மாறுபாடு உட்பட ஆறு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மார்ச்19: பணக்கார எம்.எல்.ஏ., பட்டியலில் மஹாராஷ் டிராவின் பராக் ஷா (பா.ஜ., ரூ. 3400 கோடி) முதலிடம்.
மார்ச்20: சத்தீஸ்கரில் பிஜப்பூர், தண்டேவாடா மாவட்ட எல்லையில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் 30 நக்சலைட்கள் பலி.
மார்ச்24: எம்.பி.,க்களுக்கான மாத ஊதியம் ரூ. 1.24 லட்சம் (முன்பு ரூ. 1 லட்சம்), பென்சன் ரூ. 31 ஆயிரம் (ரூ. 25,000) என உயர்வு.
மார்ச்25: ஜம்மு காஷ்மீரில் பிரிவினையை வலியுறுத்தும் ஹூரியத் அமைப்பில் இருந்து ஜே.கே.மக்கள் இயக்கம், ஜனநாயக அரசியல் இயக்கம் வெளியேறின.
மார்ச்30: சத்தீஸ்கர் பிஜப்பூர் மாவட்டத்தில் 50 நக்சலைட்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர்.
மார்ச்31: பிரதமரின் தனி செயலராக நிதி திவாரி நியமனம்.
உலகம்
மார்ச்1: உருகுவே அதிபராக யமன்டு ஒர்சி பதவியேற்பு.
* அமைதி பேச்சு வார்த்தைக்கு உடன்படாததால் உக்ரைனுக்கான நிதியை அமெரிக்கா நிறுத்தியது.
* பிரேசிலில் 'வியடினா - 19' என்ற பசு மாடு ரூ. 40 கோடிக்கு ஏலமாகி கின்னஸ் சாதனை படைத்தது. எடை 1101 கிலோ இது இந்தியாவின் 'நெலார்' பசு இனத்தை சேர்ந்தது.
மார்ச்2: அமெரிக்காவின் தேசிய அலுவல் மொழியாக ஆங்கிலத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்.
மார்ச்9: சிரியாவில் அரசு படை - முன்னாள் அதிபர் ஆசாத் ஆதரவாளர்கள் மோதல். 1000 பேர் பலி.
மார்ச்11: மொரீஷியஸ் உயரிய விருதை வென்ற முதல் இந்தியரானார் பிரதமர் மோடி.
* பாகிஸ்தானில் குவெட்டா நகரில் இருந்து பெஷாவருக்கு 400 பேர் சென்ற பயணிகள் ரயிலை, பலுசிஸ்தான் பயங்கரவாதிகள் கடத்தல். ராணுவ தாக்குதலில் 27 பயங்கரவாதிகளும், எதிர் தாக்குதலில் ரயில் டிரைவர் உட்பட 10 பேர் பலி. 200 பிணை கைதிகள் விடுவிப்பு.
* உலகில் 2020 - 2024ல் ஆயுத இறக்குமதியில் இந்தியாவை முந்தியது உக்ரைன்.
மார்ச்12: மியான்மர் - தாய்லாந்து எல்லையில் மோசடி நிறுவனங்களில் சிக்கி தவித்த 549 இந்தியர்கள் மீட்பு.
மார்ச்14: கனடா பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு.
மார்ச்17: 40 ஆண்டுக்குப்பின் மேற்கு ஆசிய நாடான ஆர்மீனியா - அஜர்பைஜான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்.
* அமெரிக்க அதிபர் டிரம்பின் 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி கணக்கு துவக்கினார்.
* டிரினிடாட் டொபாகோ பிரதமராக ஸ்டூவர்ட் யங் பதவியேற்பு.
மார்ச்18: சீனாவின் பி.ஒய்.டி., மின்சார கார் நிறுவனம், ஐந்து நிமிட சார்ஜில் 400 கி.மீ., துாரம் செல்லும் அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை உருவாக்கியது.
மார்ச்21: லண்டன் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்தில் மின்தடை. நாள் முழுவதும் விமான சேவை பாதிப்பு.
* நமீபியாவின் முதல் பெண் அதிபராக நெடும்போ நன்தி பதவியேற்பு.
மார்ச்26: தென் கொரியா யுசியாங், சான்சியாங் நகரில் கட்டுத்தீ. 27 ஆயிரம் பேர் வெளியேற்றம். 27 பேர் பலி.
மார்ச்28: உலக பால் உற்பத்தியில் இந்தியா (23.90 கோடி மெட்ரிக் டன்) முதலிடம்.
வரமாக வந்த வன்தாரா
மார்ச்4: குஜராத்தின் ஜாம்நகரில் 'ரிலையன்ஸ்' நிறுவனத்தின் வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு மையத்தை (வன்தாரா) பிரதமர் மோடி திறந்து வைத்தார். பரப்பளவு 3000 ஏக்கர். 2000 விலங்குகள் உள்ளன.
'கரும்பி' சாதனை
மார்ச்23: உலகிலேயே உயரம் குறைவான (1.3 அடி) ஆடு என கின்னஸ் சாதனை படைத்தது கேரளாவில் உள்ள 'கரும்பி' ஆடு.
கோடிக்கணக்கில் பறிமுதல்
மார்ச்24: டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், கோடிக்கணக்கான ரூபாய் நோட்டு எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்டது.
குலுங்கிய மண்டாலே, பாங்காக்
மார்ச்28: மியான்மர் மண்டாலே நகரிலும், தாய்லாந்து பாங்காக் நகரிலும் ஒரே நேரத்தில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம். 5456 பேர் பலி.
டாப் 4
* மார்ச்8: திருமண விருந்தில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை.
* மார்ச்9: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா.
* மார்ச்18: காசாவில் ஹமாஸ் அமைப்பு மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல். 591 பேர் பலி.
* மார்ச்30: பிரதமரான பின் முதல்முறையாக நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகம் சென்றார் மோடி.

