/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
மத்திய உளவுத்துறையில் உதவியாளர் வாய்ப்பு
/
மத்திய உளவுத்துறையில் உதவியாளர் வாய்ப்பு
PUBLISHED ON : செப் 09, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய உளவுத்துறையில் (ஐ.பி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
செக்யூரிட்டி அசிஸ்டென்ட் (மோட்டார் டிரான்ஸ்போர்ட்) பிரிவில் டில்லி 127, காஷ்மீர் 33, அருணாச்சல் 19, லடாக் 18, ராஜஸ்தான் 16, பஞ்சாப் 12, தமிழகம் 11, ஒடிசா 11 உட்பட மொத்தம் 455 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2. நான்கு சக்கர வாகன டிரைவிங் லைசென்ஸ் தேவை.
வயது: 18-27 (28.9.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, டிரைவிங் டெஸ்ட், நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 650. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 550.
கடைசிநாள்: 28.9.2025
விவரங்களுக்கு: mha.gov.in