/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பு படையில் பணி
/
விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பு படையில் பணி
PUBLISHED ON : அக் 21, 2025

எல்லை பாதுகாப்பு படையில் (பி.எஸ்.எப்.,) விளையாட்டு வீரருக்கான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கான்ஸ்டபிள் பதவியில் தடகளம் 70, நீச்சல் 24, கூடைப்பந்து 18, குத்துச்சண்டை 18, வாலிபால் 16, டேக்வாண்டோ 15, மல்யுத்தம் 14, கபடி 14, ஜூடோ 14, கராத்தே 13, துப்பாக்கி சுடுதல் 13, ஹாக்கி 12, கால்பந்து 11, பளு துாக்குதல் 11, ஜிம்னாஸ்டிக் 9 உட்பட மொத்தம் 391 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு
கூடுதல் தகுதி: சர்வதேச / தேசிய விளையாட்டு போட்டிகளில் சான்றிதழ்.
வயது: 18-23 (1.8.2025ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லை ன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 159. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 4.11.2025
விவரங்களுக்கு: bsf.gov.in