/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை மையத்தடுப்பு மின் கம்பங்களில் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்
/
சாலை மையத்தடுப்பு மின் கம்பங்களில் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்
சாலை மையத்தடுப்பு மின் கம்பங்களில் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்
சாலை மையத்தடுப்பு மின் கம்பங்களில் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்
ADDED : ஆக 28, 2025 01:48 AM

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மையத்தடுப்பு கம்பங்களில், இரவில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது.
சென்னை - பெங்களூரு இடையே, தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், 654 கோடி ரூபாய் செலவில், நான்குவழி சாலையில் இருந்து, ஆறுவழி சாலை மற்றும் மேம்பாலங்கள் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இதில், வெள்ளைகேட் மேம்பாலம், பொன்னேரிக்கரை, ராஜகுளம் ஆகிய பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலை மைய தடுப்பு மீது, மின் கம்பங்கள் அமைத்து, மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த மின் விளக்குகள் ஒளிரும் போது, சாலை மைய தடுப்பில் இருக்கும் மின் கம்பங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால், சாலை மைய தடுப்பு மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மைய தடுப்பில் அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் மீது, இரவு நேரங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
இது, சென்னை- --- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் வாகன விபத்து தவிர்க்க வழி வகுக்கும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

