தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கிணற்றில் தவறி விழுந்த குள்ளநரி மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த குள்ளநரி மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த குள்ளநரி மீட்பு


ADDED : அக் 22, 2026 08:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 08:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒடுகத்துார்: ஒடுகத்துார் அருகே, 100 அடி கிணற்றில் தவறி விழுந்த குள்ளநரியை வனத்துறையினர் மீட்டனர்.

வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அருகே உள்ள ஓட்டேரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவருக்கு சொந்தமான நிலத்தில், 100 அடி ஆழமுடைய விவசாய கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில், இன்று (அக்.,22) இரவு அந்தப் பகுதியில் உலா வந்த குள்ளநரி ஒன்று எதிர்பாராதவிதமாக இந்தக் கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

காலையில் கிணற்றின் அருகே சந்திரன் சென்ற போது கிணற்றிற்குள் இருந்து ஏதோ சத்தம் கேட்பதை கண்ட சந்திரன், ஒடுக்கத்துார் வனச்சரகர் பாபு மற்றும் ஒடுகத்தூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்த ஒடுகத்தூர் வனத்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் சென்று பத்திரமாக குள்ளநரியை மீட்டனர். பின், மீட்கப்பட்ட குள்ளநரியை வனத்துறையினர் அருகில் உள்ள கருத்தமலை காப்புக்காட்டுப் பகுதியில் விட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us