PUBLISHED ON : மே 24, 2026

அ நிறம் | அளவு
நீண்ட நேரம் மொபைல் போன் பயன்படுத்தும் போது, கண் தசைகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, உள்நோக்குவதால் மாறுகண் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
”அதிக நேரம் கண்களை ஒரே இடத்தில் குவிப்பதால் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படும். கண் தசைகளில் அழுத்தம் ஏற்பட்டு, கண்கள் உள்நோக்கி மாறலாம். பார்வை குறைபாடு என்று தற்போது அதிக குழந்தைகள் சிகிச்சைக்கு அழைத்து வரப்படுகின்றன” என டாக்டர்கள் தெரிவித்தனர்.
”பள்ளியில் கரும்பலகை தெரியாமை, எழுத்துகள் தெளிவாக தெரியாதது, படிப்பில் கவனம் குறைவது போன்ற புகார்களுடன் வருகின்றனர். மொபைல் போன் பழக்கத்தை குறைக்காவிட்டால், மேலும் மோசமான விளைவுகள் உண்டாகும்” என்றனர்.
