தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு கஷாயம் டெங்குவை குறைக்குமா?

பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு கஷாயம் டெங்குவை குறைக்குமா?

பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு கஷாயம் டெங்குவை குறைக்குமா?


PUBLISHED ON : நவ 15, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 15, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. டெங்கு காய்ச்சல் என்று உறுதியானதும், பெற்றோர் என்னிடம், டெங்கு பாதிப்பு வந்தால், நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றனர். கசப்பாக இருப்பதால், குடித்ததும் குழந்தை வாந்தி எடுக்கிறது. கட்டாயம் கொடுக்க வேண்டுமா? என்று கேட்கின்றனர்.

டெங்கு பாதிப்பால் சிக்கல்கள் ஏற்படுவதற்கு காரணம், தட்டணுக்கள் குறைவதோ, அதிக காய்ச்சலோ கிடையாது; மாறாக, ‘கேப்பிலரி லீக் சிண்ட்ரோம்’ எனப்படும். உடலில் உள்ள திரவங்கள் அதிக அளவில் வெளியேறுவதால் தான் பிரச்னையே வருகிறது.

கசப்பான கஷாயங்களை கட்டாயப்படுத்தி குழந்தைகளை குடிக்க வைத்து, அதனால் வாந்தி எடுத்தால், திரவ இழப்பு இன்னும் அதிகமாகும்; ரத்த அழுத்தம் குறையும்.

அதனால், குடிக்க மறுக்கும் குழந்தைக்கு கஷாயங்களை தர வேண்டாம்.

டெங்கு காய்ச்சலின் இன்னொரு பெயர் ‘பிரேக் போன் பீவர்!’ எலும்பே நொறுங்கும் அளவுக்கு வலி இருக்கும். இந்த வலியைக் குறைப்பதற்கு நிலவேம்பு கஷாயம் மிகவும் உதவியாக இருக்கும்.

சித்த மருத்துவர்கள் சொல்வது போன்று, வைரஸ் எதிர்ப்பு தன்மையும் உள்ள து. தட்டணுக்களின் எண்ணிக்கையை, பப்பாளி இலைச்சாறு அதிகப்படுத்தும். சில ஆராய்ச்சிகளில் இவை உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மாத்திரை, டானிக் வடிவில் இவை கிடைக்கின்றன. ஆனால், இவற்றை உபயோகிப்பதை விடவும், இயற்கையான மூலிகைகளை பயன்படுத்துவதே நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us