sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

வெளிநபர் எவரையும் நம்பாதீங்க முதியோருக்கு போலீஸ் புத்திமதி

/

வெளிநபர் எவரையும் நம்பாதீங்க முதியோருக்கு போலீஸ் புத்திமதி

வெளிநபர் எவரையும் நம்பாதீங்க முதியோருக்கு போலீஸ் புத்திமதி

வெளிநபர் எவரையும் நம்பாதீங்க முதியோருக்கு போலீஸ் புத்திமதி


PUBLISHED ON : ஆக 31, 2025

Google News

PUBLISHED ON : ஆக 31, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஒன்றுக்கு இரண்டு முறை எதையும் சரிபார்த்தால் மோசடியில் சிக்குவதில் இருந்து தப்பிக்கலாம்' என, சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்துகின்றனர். வீட்டுக்கு அருகில் இருக்கும் பெண், தன்னை தாக்கி நகைகளை பறித்துச் செல்வார் என்பது அந்த மூதாட்டிக்கு தெரியாது. இத்தனைக்கும் அந்த பெண் மிகவும் அறிமுகமானவர். வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களை குறிவைத்து, இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. முதியவர்கள் யாரையும் சட்டென நம்பி விடுவதால், இதுபோன்ற மோசடி பேர்வழிகள் பலரிடம் கைவரிசையை காட்டுகின்றனர்.

தனியாக இருக்கும் முதியவர்களை குறிவைத்து மோசடிகள் அரங்கேறி வருகின்றன. வங்கிக்கடவு சொல்லை கேட்டு, அதன் வாயிலாக கனிசமான தொகையை எடுப்பதில் துவங்கி பல்வேறு மோசடிகள் செய்யப்படுகின்றன. இதைத்தவிர்க்க விழிப்புடன் இருக்க வேண்டும் என்கின்றனர் போலீசார்.

சைபர் கிரைம் போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் கூறியதாவது:

* எக்காரணம் கொண்டும் அறிமுகம் இல்லாத நபர்களிடம், தங்களை பற்றிய தகவல்களை தரக் கூடாது.

* அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை, ஒரு போதும் ஏற்கக்கூடாது.

* மொபைல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக வரும் லிங்க்கிற்குள் செல்லக்கூடாது.

* டிஜிட்டல் அரெஸ்ட் என்ற ஒன்றே இல்லை. அப்படி யாராவது தெரிவித்தால் நம்ப வேண்டாம்.

* பகுதி நேர வேலை இருப்பதாக வரும் தகவல்களை நம்பி, அதில் கொடுக்கப்படும் டாஸ்க்குகளை மேற்கொள்ள வேண்டாம்.

* வங்கியில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி, கணக்கு விபரங்களை சரிசெய்ய வந்துள்ள பாஸ்வேர்டு கேட்டால், இணைப்பை துண்டித்து விட வேண்டும். வங்கிகள் அவ்வாறு தொடர்பு கொள்வதில்லை.

* ஓய்வூதியர்கள் தங்களது அனைத்து தகவல்களையும் துறை சார்ந்த அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் வாயிலாக, அல்லது நேரில் சென்று 'அப்டேட்' செய்து கொள்ள வேண்டும்.

* மொபைல் எண்ணுக்கு வரும் தகவல்களை, பல முறை சரிபார்த்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.

* பங்கு வர்த்தகத்தை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்வது பாதுகாப்பானது .

* அதிர்ஷட போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதாக, யாரேனும் தெரிவித்தால் நம்ப வேண்டாம்.

* தொழில்நுட்ப உதவிகள் புரிவதாக, ஆன்லைன் வாயிலாக தொடர்பு கொண்டால் நம்ப வேண்டாம்.

* அறிமுகமில்லாத நபர்களிடம் ஏ.டி.எம்., கார்டுகள், கடவுச் சொற்களை கொடுத்து பணம் எடுத்து தர கோர வேண்டாம்.

* மொபைல்போனுக்கு வரும் மருத்துவம் தொடர்பான தகவல்களை, உறுதிபடுத்தாமல் ஏற்றுக்கொள்ள வேண்டாம்.






      Dinamalar
      Follow us