
பல வகையான கேன்சர் பாதிப்புகளில், 'சர்கோமா' என்பது அரிதானது. ஆனால், தீவிரமான கேன்சர் வகை. சர்கோமா பற்றிய புரிதல் குறைவாக இருப்பதால், ஆரம்பகால பரிசோதனை, சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.
'மறக்கப்பட்ட கேன்சர்' என்று வருத்தத்துடன் அழைக்கப்படும் சர்கோமா, பெரும்பாலும் எலும்புகள், மென்மையான திசுக்கள், தசைகள், தசைநாளங்கள், கொழுப்பு, நரம்புகள், ரத்த நாளங்கள், குருத் தெலும்புகளில் உள்ள மெசன்கிமல் திசுக்களில் இருந்து உருவாகிறது. பல வகை கேன்சர் போன்றே, நம் நாட்டில் இளம் வயதினரை இது அதிகம் பாதிக்கிறது.
அறிகுறிகள்
ஆரம்ப நிலையில் அறிகுறிகள் இல்லாமல், கட்டி வளர வளர சில அறிகுறிகள் வெளிப்படும். கைகள், கால்கள், தோலுக்கு கீழ் வலியற்ற கட்டி, வீக்கம் தோன்றுவது முதல் அறிகுறி. முதலில் சிறியதாக இருக்கும் கட்டி, நாளாக பெரிதாகலாம்.
சில நேரங்களில், தொடு வதற்கு மென்மையாகவும் சூடாகவும் இருக்கும்.
ஆரம்பத்தில் கட்டி வலியற்றதாக இருக்கும். ஆனால், கட்டி பெரிதாகி அருகிலுள்ள நரம்புகள், தசைகளில் அழுத்தும் போது வலி ஏற்படலாம்.
எலும்பு சர்கோமா என்றால் எலும்பில் வலி ஏற்படும். சிறிய காயம் கூட எலும்பு முறிவுக்கு வழி வகுக்கும் அளவுக்கு எலும்பு கள் பலவீன மடையும்.
வயிற்றுப் பகுதியில் உருவாகும்போது, அளவு பெரிதானால் மற்ற உறுப்பு களில் அழுத்தி, வயிற்று வலியை ஏற்படுத்தும்.
சில சமயங்களில், குடல் அடைப்பு போன்ற சிக்கல் களும் வரலாம். மூட்டு களுக்கு அருகில் கட்டி உருவாகியிருந்தால், மூட்டுகளின் இயல்பான அசைவுகளில் சிரமம் ஏற்படும்.
காரணங்கள்
சர்கோமாவிற்கான சரியான காரணம் இது வரை தெரியவில்லை என்றாலும், மரபணு காரணிகளால் சர்கோமா வரும் ஆபத்து அதிகம். வேறு கேன்சர் பாதிப்பிற்கு, கதிர்வீச்சு சிகிச்சை பெற்றவர்களுக்கு, அந்தப் பகுதியில் சர்கோமா உருவாகும் வாய்ப்பு சற்று அதிகம்.
இது தவிர, வினைல் குளோரைடு, டையாக்ஸின் போன்ற சில தொழில் துறை ரசாயனங்கள் வெளிப்படும் இடத்தில் நீண்ட காலமாக இருப்பவர்களுக்கு, நிணநீர் மண்டலத்தில் ஏற்படும் அடைப்பு, நாள்பட்ட வீக்கம், ஹெர்பெஸ் வைரஸ் 8 உட்பட சில வைரஸ் தொற்றுகள் சர்கோமாவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
சிகிச்சை
இமேஜிங் சோதனைகளான எக்ஸ்ரே, சி.டி., எம்.ஆர்.ஐ., பெட் ஸ்கேன், கட்டி திசு மாதிரியை எடுத்து பரிசோதிக்கும் பயாப்ஸ்சி ஆகியவை சர்கோமாவைக் கண்டறியும் பரிசோதனை கள். பயாப்ஸி மட்டுமே சர்கோமாவை உறுதி செய்யும்.
கட்டியை சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக் களுடன் சேர்த்து முழுதுமாக கட்டியை அகற்றுவது, குறிப்பாக கை, கால்களில் இருந்தால், உறுப்புகளை அகற்றாமல், உயர் ஆற்றல் கதிர்களைப் பயன்படுத்தி கேன்சர் செல்களை அழிப்பது, அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும் கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி சிகிச்சை செய்து சர்கோமாவை கட்டுப் படுத்தலாம்.
கேன்சர் செல்களை அடையாளம் கண்டு அழிக்கும் டார்கெட்டெட் தெரபி, நோய் எதிர்ப்பு சக்தியைப் மேம்படுத்தி கேன்சர் செல்களை எதிர்த்துப் போராட வைக்கும் இம்மியூனோ தெரபி ஆகியவையும் சர்கோமாவை குணப்படுத்த உதவும்.
டாக்டர் பி.கே.ஜெயச்சந்திரன், அப்பல்லோ கேன்சர் சென்டர், சென்னை. 044 6115 1111apollocancercentres@apollohospitals,com