PUBLISHED ON : செப் 15, 2025

மூன்று சிறுவர்கள் கொய்யா மரத்தில் பழங்களைப் பறித்தனர்.
கீழே இறங்கியபின், அனைவரிடமும் சமமான எண்ணிக்கையில் கொய்யாப் பழங்கள் இருந்தன.
தங்களிடம் இருந்த பழங்களில், 8 பழங்களை ஒவ்வொருவரும் அங்கேயே சாப்பிட்டனர்.
மொத்தமாகச் சில பழங்கள் அவர்களிடம் இருந்தன. இந்த எண்ணிக்கை, ஒவ்வொருவரும் பறித்த கொய்யாப் பழங்களின் எண்ணிக்கைக்குச் சமம் என்றால்,
ஒவ்வொருவரும் எத்தனை கொய்யாப் பழங்களைப் பறித்திருப்பார்கள்?
விடை: 12
தீர்வு: ஒவ்வொருவரும் பறித்த கொய்யாப் பழங்களின் எண்ணிக்கையை x என்க.
மூன்று பேர் பறித்தலால், 3x.
ஒவ்வொருவரும் 8 பழங்களைச் சாப்பிட்டதால், அவரவரிடம் x-8 பழங்கள் மீதமிருக்கும்.
இதன்மூலம், மூன்று பேரிடம் இருக்கும் மீதமுள்ள மொத்த பழங்களின் எண்ணிக்கையை 3(x-8) என்று அறியலாம்.
மீதமுள்ள மொத்த பழங்களின் எண்ணிக்கையானது, ஒவ்வொருவரும் பறித்த கொய்யாப் பழங்களின் எண்ணிக்கைக்குச் சமம் என்று சொல்லியிருப்பதால்,
3(x-8) = x என்று கருதலாம்.
இதனை, 3x-24 = x என்று சுருக்கலாம். மேலும்,
3x-x = 24
2x = 24
x = 12
எனவே, ஒவ்வொருவரும் பறித்த கொய்யாப் பழங்களின் எண்ணிக்கை 12.