
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலியும், அணிலும் நண்பர்களாக வசித்தன. ஒருநாள் வயலிற்கு சென்றன. அங்கு மக்காச்சோளம் அடுக்கப்பட்டிருந்த பெட்டிகளை பார்த்தன.
அதில் ஒன்றில் சிறிய துவாரம் இருந்தது. அதைப் பார்த்த எலி, ' நண்பா... பெட்டிக்குள் நுழைந்து சோளத்தை சாப்பிடலாம்' என்றது. ஆனால் அணிலோ, 'வேண்டாம். சிறிய துவாரத்திற்குள் சென்று திரும்ப முடியாமல் பிரச்னையில் சிக்கிக் கொள்வோம் அவசரம் வேண்டாம்' என்றது. அணிலின் பேச்சை ஏற்காமல் அதற்குள்ளே சென்ற எலி வயிறு புடைக்க சாப்பிட, வெளியேற முடியாமல் தவித்தது. நல்லதை மட்டும் கேட்டு செயல்படுத்து.