நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'எனக்கு ஆயிரம் டாலர் பணம் அவசரமாக தேவைப்படுகிறது' எனக் கேட்டார் விஞ்ஞானி எடிசனின் நண்பர். அந்த நேரத்தில் டெலி பிரிண்டரைக் கண்டுபிடித்தார்.
இந்த கருவி மூலம் ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு அச்சு வடிவில் செய்தி அனுப்ப முடியும். அதை அதிக அளவில் உற்பத்தி செய்ய ஒரு நிறுவனம் எடிசனிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்ட தொகை தருவதாகக் கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வற்புறுத்தினர். ஆனால் நண்பருக்கு கேட்ட தொகை கண் முன்னே வந்தது. அதனால் முடிவுக்கு வர முடியாமல் அமைதியாக இருந்தார். ஆனால் அந்த நிறுவனத்தினரோ திடீரென ஒரு பெரிய தொகையை தருவதாக தெரிவித்தனர். மகிழ்ச்சியுடன் கையெழுத்திட்டார் எடிசன்.
அமைதியும் சில நேரத்தில் ஆச்சரியத்தை நிகழ்த்தும்.