நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விவசாயி ஒருவர் காய்கறி மூடையை வண்டியில் ஏற்றிக் கொண்டு சந்தைக்கு சென்றார். அப்போது வண்டியின் சக்கரம் சேற்றில் சிக்கியது. இது என்ன சோதனை? என நொந்து கொண்டார்.
தானே முயற்சியில் இறங்கினார். என்ன ஆச்சரியம்? துாக்க முடியாது என நினைத்த சக்கரம் மேட்டிற்கு வந்தது. அப்போது இளைஞர் ஒருவர் கைகொடுத்து உதவியது அவருக்கு தெரிந்தது. நன்றி சொன்னார் விவசாயி.
''ஆண்டவர் உதவி செய்வார் என கைகளைக் கட்டிக் கொண்டு இருந்தால் எப்படி? நாம் முயற்சியில் இறங்கினால் தான் உதவிக்கு அவர் ஓடி வருவார். அதற்கு நாம் தான் வாய்ப்பளிக்க வேண்டும்'' எனச் சொன்னார் இளைஞர்.