நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போதகரை பார்க்க வந்த சகோதரி, 'நல்ல சேதி ஒன்றை சொல்லப் போகிறேன்' என்றாள். 'நல்லது நடந்தால் மகிழ்ச்சி தானே' என ஆமோதித்தார் போதகர்.
'என்னை இதுநாள் வரை வாட்டி வதைத்த வேதனை நீங்கி விட்டது. அதாவது என் மாமியார் மரித்து விட்டார்' என்றாள் மகிழ்ச்சியாக.
அதை கேட்ட அவர், 'வயதில் மூத்தவர்களை மதிக்க கற்றுக்கொள். உறவினர் மீது அன்பு காட்டு. யாரையும் பழிக்காதே. அன்பு பெருகட்டும்' என சகோதரிக்கு அறிவுரை சொன்னார் போதகர்.