ADDED : டிச 06, 2024 07:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வங்கி மேலாளர் டேனியல் பணிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். தயங்கியபடி வேலைக்காரர் ஜான் அவரிடம், ''என் மகன் பி.காம்., முடிச்சிட்டான். ஏதாவது வேலை வாங்கி கொடுங்க எஜமான்'' என்றார். சரி பார்க்கலாம் என தலையசைத்து விட்டு புறப்பட்டார்.
ஒருநாள் ஜானின் மகன் வந்த போது அவனிடம் அலட்சியமாக நடந்தார். ஆனாலும் நம்பிக்கை இழக்கவில்லை. ஆண்டுகள் பல கடந்தன. ஒருநாள் டேனியலின் பணியை பாராட்டி சிறப்பு அந்தஸ்து வழங்க இருந்தனர். அதற்காக சிறப்பு விருந்தினரின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார் டேனியல்.
வந்தவர் வேறு யாருமல்ல... அவர் ஜானின் மகன். காலம் பதில் சொல்லும் என்பது நிஜம் தானே...