நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நுண்கிருமி பற்றிய உண்மைகளைக் கண்டறிந்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லுாயி பாஸ்டர். சர்வதேச மருத்துவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இவர் லண்டன் சென்ற போது வரவேற்பு நிகழ்ச்சியில் பலத்த கைதட்டல் எழுந்தது.
அந்த வரவேற்பு இங்கிலாந்தைச் சேர்ந்த வேல்ஸ் இளவரசருக்கானது என எண்ணிய லுாயி பாஸ்டர், 'நான் சற்று நேரம் கழித்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தால் உங்களுக்கு வசதியாக இருந்திருக்கும்' என பணிவுடன் கூறினார் லுாயி பாஸ்டர். 'இந்தக் கைதட்டல் உங்களுக்காகவே' என லுாயி பாஸ்டரிடம் உற்சாகத்துடன் தெரிவித்தார் நிகழ்ச்சியின் பொறுப்பாளர். பணிவுள்ளவனை உலகமே கொண்டாடும்.

