
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'உலகில் நடக்கும் அக்கிரமத்தை பார்க்கும் போது, ஆண்டவர் இருக்கிறாரா என சந்தேகம் ஏற்படுகிறது. நல்லவர் வாழ வழியில்லை' என வருத்தப்பட்டான் விமல்.
அமைதியாக கேட்ட பாதிரியார், ''உன் மகன் குடித்து விட்டு பைக்கில் சென்ற போது விபத்து நேர்ந்ததை மறந்து விட்டாயா... அப்போது பெரியவர் ஒருவர் இறந்தாரே... அவரைப் பற்றி ஒரு நாளாவது நீ யோசித்தது உண்டா...
ஏன் உன் அண்ணனின் மகன் ஒருதலை காதலில் சிக்கி நடை பிணமாக இருக்கிறானே... அதற்கெல்லாம் ஆண்டவர் தான் காரணமா... என்றார். விமல் வாயடைத்து நின்றான்.
'சோதிக்கப்படுகிற எவனும், 'நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன்' என சொல்லாதிருப்பானாக. அவனவன் தன் சுய ஆசையினால் இழுக்கப்பட்டு சோதிக்கப்படுகிறான்'.

