நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எட்டு வயது சிறுவன் ஒருவன் இரவில் வீட்டை விட்டு புறப்பட்டான். மகனைக் காணாத பெற்றோர் ஊர் முழுதும் தேடி ஒருவழியாக கண்டுபிடித்தனர். எங்கு தெரியுமா... ஒதுக்குப் புறத்தில் உள்ள காட்டுப் பகுதியில் குளக்கரை ஒன்றில் நிலவின் ஒளியில் துள்ளி விளையாடும் மீன்களை ரசித்தபடி நின்றிருந்தான்.
'உனக்கு பயமில்லையா?' எனக் கேட்டாள் தாய்.
'பயம் என்றால் என்ன அம்மா' என பதிலுக்கு கேட்டான் அவன். மகனின் துணிவைக் கண்ட தாய் மகிழ்ந்தாள். அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல... மாவீரன் நெப்போலியன் தான். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது நிஜம் தானே...

