நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொறாமைக்காரன் ஒருவன் 'தனக்கு ஒரு மடங்காக கிடைக்கும் நன்மை, எதிர்வீட்டுக்கு இருமடங்காக கிடைக்கிறதே... இதே போல தனக்கு ஒரு மடங்கு கிடைக்கும் தீமை அவனுக்கு இரு மடங்காக வேண்டும்' என நினைத்தான்.
இதன் பின் தனக்கு ஒரு கண் குருடாக வேண்டும் என பிரார்த்தனை செய்தான். அப்படியே ஆனது. தனக்கு ஒரு கண் போனதால் எதிர்வீட்டுக்காரருக்கு இரு கண்களும் பறிபோகும் என காத்திருந்தான். ஆனால் அவர் இயல்பாக இருந்தார். அதைக் கேள்விப்பட்ட அவன் துடித்தான்.
'உனக்கு மட்டுமில்லை; பொறாமை கொண்ட யாருக்கும் இதுவே கதி. மனதில் நல்லது நினைத்தால் அது மற்றவருக்கும் நன்மையைத் தரும். மற்றவருக்கு கேடு நினைத்தால் அது உன்னையே வந்தடையும்'.