
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு பள்ளியில் கணக்கு தேர்வு முடிந்து விடைத்தாள் கொடுத்தனர். ஒரு மாணவன் பேப்பரை வாங்கியவுடன் அழ ஆரம்பித்தான். “ஏண்டா அழுகிறாய். நீ தான் கணக்கில் 96 மார்க் வாங்கியிருக்கியே” எனக் கேட்டனர் சக மாணவர்கள்.“ போங்கடா! நுாற்றுக்கு நுாறு கிடைக்கலையே” என வருந்தினான் அவன்.இன்னொரு மாணவன் சிரித்தபடி நின்றான்.
அவனிடம் “டேய்! நீ வாங்கியது வெறும் நாலு மார்க். இதிலே என்னடா சிரிப்பு?” என்றனர்.
“எனக்கும் கீழே 1,2 வாங்கியவன் இருக்கான். அவனை விட நான் உசத்தி'' எனச் சிரித்தான்.
மேலான விஷயங்கள் பற்றியே சிந்திக்க வேண்டும். முதல் மாணவன் முயற்சியின்மைக்காக அழுகிறான். அடுத்த மாணவன் தோல்வியை மறைக்கச் சிரிக்கிறான்.
மேலானதை மட்டும் தேடுங்கள்.