நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழ்க்கை என்றால் பிரச்னை இருக்கவே செய்யும். அதிலும் கணவன், மனைவிக்கு இடையே பிரச்னை வரும் போது சொல்லவே வேண்டாம். உதாரணத்திற்கு இந்த சம்பவத்தைப் பாருங்கள். அலுவலகத்திற்கு கிளம்ப அவசரமாக சாப்பிட ஆரம்பித்தான் லாரன்ஸ். உணவில் கற்கள் இருப்பதை உணர்ந்தான். ''ஏன்... இவ்வளவு அஜாக்கிரதை'' என எண்ணியபடி கல்லைக் கடித்து விட்டான். பக்கத்தில் நின்ற மனைவி. ''என்னங்க கல்லா?'' எனக் கேட்டாள். சிரித்தபடி ''அங்கங்கே கொஞ்சம் சோறும் இருக்கு. பரவாயில்லை'' என்றான்.
அந்த வார்த்தை மனைவியை பாதித்தது. இனி சமையலில் கவனம் வேண்டும் என உறுதி கொண்டாள். ஒருவேளை சப்தமிட்டிருந்தால் நிலைமை என்னாகும்.
குடும்பத்திற்குள் விட்டுக் கொடுத்தலும், வெளியே விட்டுக் கொடுக்காமல் இருப்பதே வாழ்க்கை ரகசியம். அன்பு கோபம் கொள்ளாது. அது சாந்தமும் தயவும் கொண்டது.