நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்த்தார் சிங் என்ற ஊழியக்காரரை திபெத் லாமாக்கள் சிறைபிடித்தனர். தண்டனையாக பழுக்க காய்ச்சிய கம்பியால் உடலெங்கும் குத்தினர். ஆனால் அவரின் முகமலர்ச்சி குறையவில்லை. ஆச்சரியப்பட்ட லாமாக்கள், 'தண்டனையின் போது உன்னால் எப்படி சிரிக்க முடிகிறது' எனக் கேட்டனர்.
''குளிர்ந்த நதி ஒன்றை ஆண்டவர் என்னுள் ஓடச் செய்திருக்கிறார். அதனால் சூடு என்னை தாக்காது. மாறாக தண்டனையும் இதமாக இருக்கிறது'' என்றார் கர்த்தார் சிங். உங்களுக்கு ஏற்பட்ட துன்பம் என்னால் குளிர்விக்கப்படும் என்கிறது பைபிள்.