
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெருவில் நடந்து சென்றார் விஞ்ஞானி ஐன்ஸ்டீன். எதிரில் வந்த சோம்பேறி சிறுவனிடம், 'உன் முகத்தை கழுவி விட்டு வா... சென்ட் பாட்டில் தருகிறேன்' என்றார். 'இதைக் கொண்டு என்ன செய்வாய்' எனச் சிறுவனிடம் கேட்டார். அவனோ சிறிதும் யோசிக்காமல், 'முடி திருத்தியும், முகச்சவரம் செய்தும் வந்தால் தங்களுக்கே திரும்ப கொடுப்பேன்' என்றான்.
குறையை நாசூக்காக தெரியப்படுத்தினால் பதிலுக்கு அவனும் நம் குறையைச் சுட்டிக் காட்டுகிறானே என சிரித்தார். யானைக்கும் அடி சறுக்கும் அல்லவா... சென்ட் பாட்டிலை கொடுத்து விட்டு பலே... பையா... என அவனது முதுகில் செல்லமாக தட்டிக் கொடுத்து புறப்பட்டார்.