நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீடரான லாசரின் வீட்டிற்கு ஒருமுறை விருந்துக்கு சென்றார் இயேசு. அப்போது லாசரின் சகோதரி மரியா வாசனை மிக்க தைலத்தை ஆண்டவரின் பாதங்களில் பூசி மகிழ்ந்தாள். அதைக் கண்ட யூதாஸ், 'இந்த வாசனை தைலத்தை விற்று ஏழைகளுக்கு கொடுத்திருக்கலாமே' என்றான்.
இதற்கான காரணத்தை சொல்லும் போது, 'யூதாஸ் திருடனாக இருந்தான். இயேசு உள்ளிட்ட எல்லாச் சீடர்களின் பணமும் அவனிடம் தான் இருந்தது. அதையும் அடிக்கடி கையாடல் செய்வான்' என்கிறது பைபிள்.
(முப்பது வெள்ளிகள்) பணத்திற்கு ஆசைப்பட்டே ஆண்டவரை காட்டிக் கொடுத்தான் யூதாஸ். அவனை திருடனாக மாற்றியதும், குருவையே காட்டிக் கொடுத்து துரோகியாக்கியதும் 'பணத்தாசை' தான்.
ஆசையின் விளைவு அழிவு தான்