தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/தாய்மண்ணே வணக்கம்

தாய்மண்ணே வணக்கம்

தாய்மண்ணே வணக்கம்


ADDED : ஆக 08, 2025 07:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2025 07:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டவரின் அடியாராக இருந்தவள் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த எலியா. எதிரிகளால் அவளது உயிருக்கு ஆபத்து ஏற்படவே, 'நான் பூமியில் வாழ்ந்தது போதும்; என் உயிரை எடுத்துக் கொள்ளும்' என அழுதபடி துாக்கத்தில் மூழ்கினாள்.

அவளைத் தேடி வந்த வானதுாதர் ஒருவர், 'சாப்பிடு' என தட்டி எழுப்பினார். கண் விழித்த போது நெருப்பில் சுட்ட அப்பம் ஒன்றும், பாத்திரத்தில் தண்ணீரும் இருந்தது. அதை சாப்பிட்டதும் களைப்பால் மீண்டும் துாங்கினாள்.

மறுநாள் காலையில் வானதுாதர் தட்டி எழுப்பி, 'எழுந்து சாப்பிடு; ஏனெனில் நீண்ட துாரம் நீ பயணிக்க வேண்டும்' என உணவளித்தார். சாப்பிட்டதும் உடலில் பலம் அதிகரித்தது. தொடர்ந்து 40 நாள் நடந்தே பாலைவனத்தில் உள்ள ஓரேபு என்னும் மலையை அடைந்தாள்.

அப்போது 'மலை மீதேறி என் முன்னே வா. என் அருள் உனக்கு உண்டு' என அசரீரி கேட்டது. அத்துடன் பெருங்காற்று, நிலநடுக்கம், நெருப்பு என ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்டது. பின்னர் மலையின் மீதேறி ஆண்டவரின் தரிசனத்தால் அளவற்ற சக்தியை அடைந்தாள்.

சத்தியத்தை போதிக்க தன் தாய் மண்ணிற்கு திரும்பினாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us