
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிரேக்க தத்துவஞானியான சாக்ரடீஸ் எப்போது பிறந்தார் என்பதற்கான ஆதாரம் இல்லை. இவரது தந்தையார் சிற்பி.
தாயார் மருத்துவச்சி. சுயமுயற்சியால் முன்னேறிய இவர், ஏதென்ஸ் நகரில் கல்வி மையம் ஒன்றை உருவாக்கினார். அதன் மூலம் சமுதாய வளர்ச்சிக்காக பாடுபட்டார். தர்க்க ரீதியாக, 'ஏன் எதற்கு எதனால்' என எந்த விஷயத்தையும் அணுக வேண்டும் என்பது இவரின் முக்கிய போதனை.
நீதி, நியாயம், ஆண்டவர், ஆன்மா, அரசு, சமூகம், பழக்க வழக்கங்களை மையமிட்டதாக இவரது அறிவுரை அனைத்தும் இருந்தன. இவரது சீடர்களில் பிளேட்டோ, ஜெனோபன், ஆண்டிஸ்டீனஸ், அரிஸ்டிப்பஸ், அல்சிபியாட்ஸ், கிரிட்டியாஸ் குறிப்பிடத்தக்கவர்கள்.

